தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Nep Result: விடாமுயற்சியுடன் போராடிய நேபாளம்.. பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா வெற்றி!

IND VS NEP Result: விடாமுயற்சியுடன் போராடிய நேபாளம்.. பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா வெற்றி!

Manigandan K T HT Tamil
Oct 03, 2023 09:55 AM IST

தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், இந்திய அணி சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை தூக்கியது.

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் (@CricCrazyJohns)

ட்ரெண்டிங் செய்திகள்

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்தது நேபாளம். ஆனால், அந்த அணியால் 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 9 விக்கெட்டுகளை இழந்தது நேபாளம்.

சிறப்பாக பந்துவீசிய இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், இந்திய அணி சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை தூக்கியது.

சென்னையைச் சேர்ந்த சாய் கிஷோருக்கு முதல் விக்கெட் கிடைத்தது. ரவி பிஷ்ணோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இவ்வாறாக அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் விடாமுயற்சியுடன் போராடியது நேபாளம். 

ரவி பிஷ்ணோய், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சரியாக காலை 6.30 மணிக்கு ஹாங்ஜோவில் போட்டித் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 3 சிக்ஸர்களை விளாசினார். ருதுராஜும் அவருக்கு தோள் கொடுத்து வருகிறார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இது அவருக்கு முதல் டி20 சதம் ஆகும்.

ருதுராஜ் கெய்ஸ்வாட் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த திலக் வர்மா 2 ரன்களில் நடையைக் கட்டினார். அதைத் தொடர்ந்து வந்த ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்தார். திபேந்திர சிங் பந்துவீச்சில் கேட்ச் ஆனார் ஜெய்ஸ்வால். ரிங்கு சிங், ஷிவம் துபே அதிரடி காட்டினர்.

ரிங்கு சிங் 37 ரன்களும், ஷிவம் துபே 25 ரன்களும் விளாசினர். 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

நேபாளம் 120 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். மிக இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் யஷஸ்வி தான்.

இதுவே அவருக்கு முதல் டி20 சதம் ஆகும். மேலும், 49 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காண்பித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

நேபாளத்திற்கு எதிரான கடைசி ஓவரில் 6, 6, 4, 1, 6, கடினமான ஆடுகளத்தில் நம்பமுடியாத பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ரிங்கு சிங் 15 பந்துகளில் 37* ரன்கள் குவித்தார்.

IPL_Entry_Point