தமிழ் செய்திகள்  /  Cricket  /  Impact Player Abishek Porel Finish Helps Delhi Capitals To Post 174 Runs Against Punjab Kings

PBKS vs DC Live Score: தாக்கம் தந்த இம்பேக்ட் வீரர்! அபிஷேக் போரல் ருத்ரதாண்டவத்தால் டெல்லி ரன் குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 23, 2024 05:28 PM IST

இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் கடைசி ஓவரில் வெளிப்படுத்திய ருத்ர தாண்டவத்தால் டெல்லி கேபிடல்ஸ் நல்ல ஸ்கோரை எட்டியுள்ளது. ஹர்ஷல் படேல் 20வது ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார்.

இம்பேக்ட் வீரராக களமிறங்கி அதிரடி பினிஷ் செய்த அபிஷேக் போரல்
இம்பேக்ட் வீரராக களமிறங்கி அதிரடி பினிஷ் செய்த அபிஷேக் போரல்

ட்ரெண்டிங் செய்திகள்

விபத்தில் சிக்கி காயமடைந்து, குணமான பின்னர் ரிஷப் பண்ட், டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக இந்த போட்டியில் ரிட்டர்ன் ஆகியுள்ளார். அதேபோல் காயத்தால் கடந்த சீசனை மிஸ் செய்த ஜானி பேர்ஸ்டோவும் இந்த சீசனில் பஞ்சாப் அணியில் களமிறங்கியுள்ளார்.

பஞ்சாப் பவுலிங்

இதையடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் அடித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33, அபிஷேக் போரல் 32, டேவிட் வார்னர் 29 ரன்கள் அடித்தனர். சுமார் 15 மாதம் இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் 18 ரன் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பார்ட்னர்ஷிப் அமையவில்லை

டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன் யாரும் நிலைத்து நின்று பேட் செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. டாப் 4 பேட்ஸ்மேனகளான டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிசப் பண்ட் ஆகியோர் அதிரடியாக பேட் செய்து பவுண்டரி, சிக்ஸர்கள் என அடித்தாலும் தவறான ஷாட்கால் அடுத்தடுத்து அவுட்டானர்கள்.

கடைசி கட்டத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி 21 ரன்கள் அடித்த அவுட்டானார்.

தாக்கத்தை ஏற்படுத்திய இம்பேக்ட் வீரர்

டெல்லி அணியில் அறிமுக வீரராக அணியில் இடம்பிடித்திருந்தார் ரிக்க புய். ஆனால் அணியின் ஸ்கோர் குறைவாக இருந்த காரணத்தால் கடைசி கட்டத்தில் ரன் குவிப்பில் ஈடுபடுவதற்காக கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் இம்பேக்ட் வீரராக ரிக்கி புய்க்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அவர் ஆட்டத்தின் 17வது ஓவரிலேயே பேட் செய்ய வந்தாலும், ஸ்டிரைக் கிடைக்காமல் இருந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் தொடக்கத்தில் இருந்து பேட் செய்ய வாய்ப்பு கிடைக்க அதை நன்கு பயன்படுத்தி கொண்ட போரல், அதிரடியாக விளையாடினார். 4,6,4,4,6,1 என ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் 20வது ஓவரை வெளுத்து வாங்கிய அவர் 25 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோரும் வெகுவாக உயர்ந்தது.

கடைசி ஓவரில் அபிஷேக் போரல் அதிரடியால் டெல்லி அணி நல்ல ஸ்கோரையும் எட்டியுள்ளது.

பஞ்சாப் பவுலர்கள் அசத்தல்

பஞ்சாப் பவுலர்கள் அனைவரும் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக சிறப்பாக பந்து வீசினார். சாம் கரன் தவிர மற்ற பவுலர்கள் அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ககிசோ ரபாடா, ராகுல் சஹார், ஹர்ப்ரீத் பிரார் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point