தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Heath Streak: ‘உயிரோட தான் இருக்காரு..’ ஹீத் ஸ்ட்ரீக் இறந்த தகவலை மறுத்த ஒலங்கா!

Heath Streak: ‘உயிரோட தான் இருக்காரு..’ ஹீத் ஸ்ட்ரீக் இறந்த தகவலை மறுத்த ஒலங்கா!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 23, 2023 11:54 AM IST

பல செய்தி ஏஜன்சிகளும் உறுதிபடுத்தியிருந்தன. இந்நிலையில், ஜிம்பாவே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஹென்றி ஒலங்கா, ‘ஹீத் ஸ்ட்ரீக் இறக்கவில்லை’ என்று தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாவே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உடன், ஒலங்கா
ஜிம்பாவே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உடன், ஒலங்கா

ட்ரெண்டிங் செய்திகள்

ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தவர் ஹீத் ஸ்ட்ரீக். கத்துக்குட்டியாக இருந்த ஜிம்பாவே அணியை, திறம்பட வழிநடத்திச் சென்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

தொடர்ந்து கிரிக்கெட் உலகில் பயணித்த அவர், ஓய்வுக்குப் பிறகு, பயிற்சியாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக், இன்று காலை மரணமடைந்ததாக உலக செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன.

அதை பல செய்தி ஏஜன்சிகளும் உறுதிபடுத்தியிருந்தன. இந்நிலையில், ஜிம்பாவே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஹென்றி ஒலங்கா, ‘ஹீத் ஸ்ட்ரீக் இறக்கவில்லை’ என்று தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

‘ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் மிகவும் உயிருடன் இருக்கிறார் மக்களே’

என்று ஸ்ட்ரீக்குடன் நடத்திய வாட்ஸ்ஆப் உரையாடலையும் இணைத்து ஒலங்கா, வெளியிட்டுள்ள ட்விட்டர், அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. இருப்பினும், யார் இந்த மறைவு வதந்தியை கிளப்பிவிட்டது என்பது புதிராக உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point