Jay Shah : ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா.. போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. டிசம்பர் 1 பதவியேற்பு!
‘‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்க ஐ.சி.சி குழு மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்’’

BCCI secretary Jay Shah : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அடுத்த சுயாதீன தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி முதல் அவர் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், அவர் மேலும் போட்டியிட விரும்பவில்லை என்று ஐ.சி.சி வாரியத்திற்கு தெரியப்படுத்திய பின்னர், ஜூலை 27 வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது.
தனி நபராக கெத்து காட்டிய ஜெய்ஷா
இந்த தேர்வுக்கான பந்தயத்தில் ஜெய் ஷா மட்டுமே நாமினேட் செய்யப்பட்டார்; அதுவும் விதிகளின்படி தற்போதைய பதினாறு ஐ.சி.சி இயக்குநர்களில் இருவரை விட மிகப் பெரிய பெரும்பான்மையுடன், அவர் நாமினேட் செய்யப்பட்டார். 35 வயதான அமித் ஷா, ஐசிசியின் மிக இளைய தலைமை தாங்கும் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். முன்னதாக, ஜக்மோகன் டால்மியா மற்றும் சரத் பவார் ஆகியோர் ஐசிசி தலைவர்களாக இருந்தனர், பின்னர் என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோர் தலைவர் பதவி மறுபெயரிடப்பட்டபோது பதவி மாற்றப்பட்டது.
இதுகுறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்க ஐ.சி.சி குழு மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். பல வடிவங்களின் சகவாழ்வை சமநிலைப்படுத்துதல், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் புதிய உலகளாவிய சந்தைகளுக்கு நமது முக்கிய நிகழ்வுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அதிகரித்தளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் நிற்கிறோம். கிரிக்கெட்டை முன்பை விட அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பிரபலமானதாகவும் மாற்றுவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.