Jay Shah: "ஆஸ்திரேலிய தொடரில் ஷமி விளையாடுவாரா இல்லையா": பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில்
Mohammed Shami: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த நவம்பரில் ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

BCCI: வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் பங்கேற்பது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிக்கைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த நவம்பரில் ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறார். செப்டம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தொடங்கும் இந்தியாவின் சீசனில் அவர் பங்கேற்க தயாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஷமி தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு இறுதி கட்டத்தில் உள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு..
அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக கடந்த மாதம் மீண்டும் பந்துவீசத் தொடங்கிய அவர், தனது பந்துவீச்சு பணிச்சுமையை படிப்படியாக அதிகரித்து வருகிறார்.