SHIKHAR DHAWAN-'இந்தியாவுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி’:சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த ஷிகர் தவான்
SHIKHAR DHAWAN - இந்தியாவுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி எனவும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த ஷிகர் தவான் குறித்தும் பகிர்கிறது இந்த கட்டுரை.

SHIKHAR DHAWAN - கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சமீபத்திய வீடியோவில் சர்வதேச கிரிக்கெட்டின் ஒருநாள், டி 20, டெஸ்ட் ஆகிய அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
எண்ணற்ற நினைவுகளை தன்னுடன் எடுத்துச் செல்வதாகவும், ரசிகர்கள், பி.சி.சி.ஐ மற்றும் டி.டி.சி.ஏ ஆகியவற்றிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஷிகர் தவான் கூறினார். இந்திய கிரிக்கெட்டின் 'கப்பார்' என்று அன்புடன் அழைக்கப்படும் தவான், இனி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடமுடியாதது குறித்து வருத்தப்படவில்லை என்றாலும், இவ்வளவு காலமாக நீல நிற ஜெர்சியை அணிந்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
இதுகுறித்து தவான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது கிரிக்கெட் பயணத்தின் இந்த அத்தியாயத்தை நான் முடிக்கும்போது, எண்ணற்ற நினைவுகளையும் நன்றியையும் என்னுடன் சுமக்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! ஜெய் ஹிந்த்!”என முன்குறிப்பு எழுதியுள்ளார்.