தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  May Sports Rewind: ரொனால்டோ செய்த சாதனை முதல் ஐபிஎல் திருவிழா நிறைவு வரை.. மே மாதத்தில் ஸ்போர்ட்ஸ் முக்கிய நிகழ்வுகள்

May Sports Rewind: ரொனால்டோ செய்த சாதனை முதல் ஐபிஎல் திருவிழா நிறைவு வரை.. மே மாதத்தில் ஸ்போர்ட்ஸ் முக்கிய நிகழ்வுகள்

Manigandan K T HT Tamil
May 31, 2024 07:00 AM IST

May Sports Rewind: மே மாதம் ஸ்போர்ட்ஸ் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

May Sports Rewind: ரொனால்டோ செய்த சாதனை முதல் ஐபிஎல் திருவிழா நிறைவு வரை.. மே மாதத்தில் ஸ்போர்ட்ஸ் முக்கிய நிகழ்வுகள்
May Sports Rewind: ரொனால்டோ செய்த சாதனை முதல் ஐபிஎல் திருவிழா நிறைவு வரை.. மே மாதத்தில் ஸ்போர்ட்ஸ் முக்கிய நிகழ்வுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

மே 2:  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வென்றது.

மே 3: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே 4: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 52வது லீக் போட்டியில் ஆர்சிபி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே 5: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியில் சிஎஸ்கே 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டியில் கேகேஆர் 98 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா வீரர் ரூப்லேவ் ஜெயித்தார்.

மே 6: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-மும்பை இந்தியன்ஸ் மோதிய 55வது போட்டியில் மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மே 7: டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், 56வது போட்டியில் டெல்லி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே 8: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 57வது போட்டியில் ஐதராபாத் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

ஐபிஎல் திருவிழா

மே 9: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், 58வது போட்டியில்  ஆர்சிபி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

மே 10: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், 59வது போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிடி வெற்றி பெற்றது.

மே 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், 60வது போட்டியில்  கேகேஆர் வெற்றி பெற்றது.

மே 12: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், 61வது போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மே 13: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ், 62வது போட்டி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மே. 14: டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மேட்ச்சில் டெல்லி 19 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே. 15: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மேட்ச்சில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே 16: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் மேட்ச் டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.

மே 17: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மேட்ச்சில் லக்னோ 18 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே 18: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சில் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மே 19: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மேட்ச்சில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மேட்ச் மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஐபிஎல் சாம்பியன்

மே 21: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தகுதிச்சுற்று 1 மேட்ச்சில் கொல்கத்தா ஜெயித்து பைனலுக்கு முன்னேறியது.

மே 22: வெளியேற்றுதல் சுற்றில் ஆர்சிபி அணியை ராஜஸ்தான் வீழ்த்தியது.

மே 24: சென்னையில் நடந்த ஐபிஎல் தகுதிச்சுற்று 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியுற்றது.

மே 26: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை அந்த அணி தட்டித் தூக்கியது.

மே 28: சவுதி புரோ லீக் தொடரில், ஒரே சீசனில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ.

WhatsApp channel

டாபிக்ஸ்