தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: சித்திரகுப்தனை விரட்டி வந்த எமன்.. தடுத்து நிறுத்திய பார்வதி.. சாகா வரம் கொடுத்த ஆதிமூலேஸ்வரர்

HT Yatra: சித்திரகுப்தனை விரட்டி வந்த எமன்.. தடுத்து நிறுத்திய பார்வதி.. சாகா வரம் கொடுத்த ஆதிமூலேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 26, 2024 06:00 AM IST

Adhimooleswarar Temple: தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிவபெருமான் கோயில்கள் அனைத்தும் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்.

பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை லிங்க வடிவில் பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். அனைத்து மக்களின் தெய்வமாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். புராணங்களில் பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும் இன்று வரை யாராலும் கண்டறிய முடியாத கடவுளாக திகழ்ந்து வருகிறார் சிவபெருமான்.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய கோவில்கள் கொண்டை வாழ்ந்து வரும் சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத எத்தனையோ கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பெருவுடையார் கோயில் மிகப்பெரிய சான்று ஆகும்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிவபெருமான் கோயில்கள் அனைத்தும் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

 

பொதுவாக சிவபெருமான் கோயில்களில் பைரவர் இருப்பார் அவருக்கு அர்த்தஜாம பூஜை நடத்துவது வழக்கமாகும். இந்த திருக்கோயிலின் சித்திர புத்தருக்கும் பூஜை நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சித்திரகுப்தர் அர்த்த ஜாமத்தில் இங்கு சிவனுக்கு பூஜை செய்வதாக கூறப்படுகிறது.

தல பெருமை

 

எமதர்மனிடம் கணக்காளராக சித்ரகுப்தர் பணியாற்றி வருகிறார். சிவபெருமானிடம் சித்ரகுப்தர் அருள் பெற்று பணி பெற்ற தலமாக இது விளங்கி வருகிறது. 12 வயதில் ஒரு உயிர் பிரியும் விதி இருந்தது. இதுகுறித்து அவருடைய தந்தை வசுதத்தன் வருந்தினார். இது குறித்து வருத்தப்பட்டு சித்திரகுப்தன் சிவபெருமானை நோக்கி வழிபட்டார்.

எமதர்மன் சித்ரகுப்தனின் உயிரைப் பறிக்க வந்த பொழுது பார்வதி தேவியை அனுப்பி எமதர்மனை தடுத்தார் சிவபெருமான். உயிர் பறிக்க வந்த எமதர்மனிடம் சித்திரகுப்தன் ஒரு சிவ பக்தன் அவனை விட்டு விடு என பார்வதி தேவி கட்டளை இட்டார். இதனால் எமதர்மன் சித்திரகுப்தனின் உயிரைப் பறிக்காமல் சென்றார்.

அதற்குப் பிறகு எமதர்மனிடம் கணக்காளராக பணியாற்றும்படி சிவபெருமான் ஆசிர்வாதம். என்றும் பன்னிரண்டு வயதுடையவராக நீர் வாழ வேண்டும் என சிவபெருமான் வரத்தை வழங்கினார். இந்த திருக்கோயிலில் அம்பாள் தேவி சன்னதிக்கு எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது.

தல வரலாறு

 

மார்க்கண்டேயர் என்றும் 16 வயது கொண்டவரத்தை பெற்றார். அதேபோல சித்திரகுப்தர் என்றும் 12 வயது கொண்ட வரத்தை பெற்றார். அப்படி சித்திரகுப்தர் இளமையாக இருக்கும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற தலம்தான் இந்த ஆதிமுலேஸ்வரர் திருக்கோயில்.

ஒருமுறை காஷ்யப மகரிஷி சிவபெருமானை வேண்டி யாகம் நடத்தினார். அப்போது வருண பகவான் மழையை பொழிந்தார். இதில் கோபமடைந்த மகரிஷி வருண பகவானுக்கு சாபம் கொடுத்தார். சாபத்தில் தனது சக்தி அனைத்தையும் வருண பகவான் இழந்தார்.

வருண பகவான் இலந்த சக்தியை மீண்டும் பெறுவதற்காக சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அதற்குப் பிறகு தவத்தின் பலனாக சிவபெருமான் வருண பகவானுக்கு அனைத்து சக்தியையும் கொடுத்தார். வருண பகவானின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் ஆதிமூலேஸ்வரராக இந்த இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

அமைவிடம்

 

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை என்ற ஊரில் இந்த ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வாகன வசதிகள், பேருந்து வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel