டிராகன் பழங்களை நீங்கள் வீட்டிலேயே வளர்க்க முடியும்; பால்கனியில் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்!
டிராகன் பழங்களை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
நீங்கள் டிராகன் பழங்களை வீட்டிலேயே வளர்க்க முடியும். இதை நீங்கள் பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ கூட வளர்த்து விடலாம். வீட்டில் டிராகன் பழங்கள் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், இதை வீட்டில் வளர்ப்பது நல்லது. இதை நீங்கள் சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் அடர்ந்த பிங்க் நிறம் உங்கள் கண்களுக்கு நல்லது. ஆனால் இதன் விலையால் நீங்கள் இதை வாங்க மாட்டீர்கள் என்றால், வீட்டிலேயே செடி வளர்த்து பயன்பெறுங்கள். டிராகன் செடிகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி என்று பாருங்கள். உங்கள் மாடித்தோட்டமோ அல்லது பால்கனியோ கூட அதற்கு போதுமானது.
விதைகள் அல்லது செடி
டிராகன் பழங்களை நீங்கள் இரண்டு வழிகளில் வளர்க்கலாம் ஒன்று விதைகள் நட்டு வளர்ப்பது, மற்றொன்று செடிகளை வாங்கி நட்டு வளர்ப்பது என இரண்டு வழிகளிலும் நட்டு வளர்க்க முடியும். ஆனால் இதை விதைகள் மூலம் வளர்ப்பதுதான் சிறந்தது. முதல் பழம் வளர்ந்து, அறுவடை செய்ய குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்.
செடியை வெட்டி வைத்து வளர்ப்பது
நீங்கள் அத்தனை காலம் காத்திருக்க விரும்வில்லையென்றால், நன்றாக வளர்ந்த டிராகன் பழச்செடியில் இருந்து ஒரு கிளையை மட்டும் வெட்டி, அதுவும் பழம் கொடுத்த கிளையாக இருந்தால் நல்லது. அதை நட்டுவைத்து செடியை வளர்த்துக்கொள்ளுங்கள். 9 இன்ச்கள் நீளமுள்ள செடியையே வெட்டி வைத்து நட்டால் நல்லது.
விதைப்பது எப்படி?
நீங்கள் விதைகளை தெளித்து டிராகன் பழச்செடிகளை வளர்க்க விரும்பினால், நல்ல பழுத்த டிராகன் பழங்களை வாங்கி, அதில் உள்ள விதைகளை மட்டும் தனியாக பிரித்து எடுங்கள். விதையுடன் சேர்ந்த சதையை எடுத்துவிடவேண்டும். இதை நீங்கள் நல்ல மண்ணில் தெளித்து விட்டால், டிராகன் பழங்கள் வளரும்.
முளைத்தல்
விதைகள் போட்ட 20 நாட்களில் முளை வரத்துவங்கும், எனவே நேரடி சூரிய ஒளியில் இதை நீங்கள் 6 மணி நேரம் வைத்தால், சீக்கிரம் முளைத்து வரும்.
செடியை நட்டுவைத்து வளர்ப்பது எப்படி?
நீங்கள் விரைவாக செடியை வளர்க்க விரும்பினால், அதற்கு சிறந்தது, செடியில் இருந்து வெட்டி நடுவதுதான். முதிர்ந்த செடியில் இருந்து வெட்டி, 9 இன்ச் நீளம் எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் மண்ணில் புதைக்கும் பகுதியில் கற்றாழையை தடவவேண்டும். இதனால் செடி நன்றாக செழித்து வளரும்.
தொட்டி
பெரிய தொட்டியைப் பயன்படுத்துங்கள். 20 இன்ச் ஆழமுள்ள தொட்டியை உபயோகியுங்கள். அதில் வளமான மண் சேர்த்து நட்டுவையுங்கள்.
மண் எப்படி இருக்கவேண்டும்?
டிராகன் பழங்களுக்கு வளமான மண் தேவைப்படும். அப்போதுதான் அது பூ விட்டு, பழம் வளரும். மண் கலவைக்கு, தோட்ட மண், ஆர்கானிக் அல்லது மாட்டு உரம், தேங்காய் நார்கழிவுகள், சாதாரண மண் சேர்த்துக்கொள்ளவேண்டும். 50 சதவீதம் மண், 30 சதவீதம் தேங்காய் நார், 10 சதவீதம் ஆர்கானிக் உரம் மற்றும் 10 சதவீதம் மண் ஆகியவை இருக்கவேண்டும்.
வளரும் நிலை
இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நல்ல வளர்ச்சி காணப்படும். வெட்டி வைக்கும் செடி அடர்ந்து படர்ந்து சுற்றிலும் வளரும்.
செடி பாதுகாப்பு
நன்றாக வளரத்துவங்கும்போது, ஒரு கம்பை வைத்து செடியை நன்றாக கட்டிவிடவேண்டும். அப்போதுதான் செடிகள் விழுந்துவிடாமல், பூ, பூத்து, காய் காய்க்கும்.
தண்ணீர்
செடிக்கு நல்ல சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதற்கு தேவையான தண்ணீரை ஊற்ற வேண்டும். குறைந்தது 6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கவேண்டும். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தண்ணீர் ஊற்றினால் போதும்.
களை
உங்கள் தாவரம் விரைந்து பூக்கள் விட்டு வளரவேண்டும் என்றால், அதை நீங்கள் தேவையானபோது டிரிம் செய்வது அவசியம். ஆரோக்கியமற்ற பகுதிகளை வெட்டிவிடவேண்டும். இதன் கிளைகள் அடர்ந்து இருந்தால், இதில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று பொருள். இதனால், பூக்கள் பூப்பது எளிது.
பூவிடும் பருவம்
விரைவிலேயே நீங்கள் சிறிய மொட்டுகள் வெளிவருவதை பார்க்கலாம், இலைகளில் இருந்து, மொட்டுகள் அழகிய வெள்ளை நிற பூக்களாக வரும். பகலில் மலரும். அடுத்து காயாகி பழம் வரும்.
பழம்
பூக்கள் நன்றாக சுருங்கி, 20 நாட்களில் பழம் அறுவடைக்குத் தயாராகிவிடும். வெளிப்புறத்தில் நல்ல பிங்க் நிறம் வந்தவுடன்தான் அறுவடை செய்யவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்