90ஸ் மனங்களை கவர்ந்த குரல்.. மலேசிய வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன் பிறந்தநாள் இன்று!
இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையில் அதிக பாடல்களை பாடியிருக்கும் யுகேந்திரன் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களில் பாடியிருக்கிறார்.
பிரபல பாடகரும் நடிகருமான மலேசிய வாசுதேவனின் மகன் தான் யுகேந்திரன். பாடகராகவும், நடிகராகவும் திரைத்துறையில் வலம் வரும் இவர் கடந்த பிக்பாஸ் சீசனின் கலந்துகொண்டார். யுகேந்திரன் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இவருக்கு பவித்ரா மற்றும் பிரசாந்தினி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவரது மனைவி ஹேமா மாலினி. இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. யுகேந்திரன் மிருதங்க வாசிப்பாளராக இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். இவரின் குரல் முதலில் பதிவானது உழவன் மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற செந்தூரப்பூவே பாடலில். வெளிநாடு கச்சேரிகளில் அப்பா மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடியிருக்கிறார். தனியாகவும் பல நாடுகளுக்கு சென்று பாடியிருக்கிறார்.'
முழு நேர பாடகராக அறிமுகமானார்
ரோஜாவனம் திரைப்படத்தில் பொள்ளாச்சி சந்தையிலே பாடலை பாடி முழு நேர பாடகராக அறிமுகமானார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையில் அதிக பாடல்களை பாடியிருக்கும் இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களில் பாடியிருக்கிறார். அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பச்சை நிறமே, கையோடு கை உள்ளக் கடத்தல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தல அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், பல சிறந்த பாடல்களை பாடியுள்ளார். இது யுகேந்திரன் பாடிய பாடல்களா என்று நாமே வியக்கும் வண்ணம் அந்த பாடல்கள் அமைந்திருக்கும்.
அவர் பாடிய பாடல்கள் சில
விக்ரமின் சாமி திரைப்படத்தில் வரும் "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்ற பாடலை ஸ்ரீலேகா பார்த்தசாரதியுடன் இணைந்து பாடியது யுகேந்திரன் தான்.
சேரனின் ஆட்டோகிராப் படத்தில் வெளியான "கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் அன்புத் தோழி" என்கின்ற பாடல் இவர் குரலில் உருவான பாடல் தான்.
பாண்டவர் பூமி படத்தில் வரும், தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் என்ற பாடலும் யுகேந்திரன் அவர்களுடைய குரலில் ஒலித்த பாடல்.
லேசா லேசா படத்தில் வந்த முதல் முதலாய் பாடலை பிரபல பாடகர் திப்பு அவர்களுடன் இணைந்து பாடியது பாடகர் யுகேந்திரன்.
காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ஓ.. மரியா ஓ.. மரியா பாடலை இவர் பாடி இருப்பார்.
இப்படி தனது நடிப்பாலும், இனிமையான குரலாலும் நம்மை மகிழ்வித்த பாடகரும் நடிகருமான யுகேந்திரன் பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் அவருக்கு வாழ்த்து கூறுவோம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்