பாவத்தால் பார்வை இழந்த மன்னன்.. ஒரு கண்பார்வை தந்த கவுமாரியம்மன்.. முழு பார்வையும் தந்த கண்ணீஸ்வரமுடையார்
Kanneeswaramudayar: சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றுதான் தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் கண்ணீஸ்வரமுடையார் எனவும் தாயார் அறம்வளர்த்த நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Kanneeswaramudayar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதி காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. உலகம் எங்கிலும் லிங்க வடிவில் மிகப்பெரிய கலைக்கூடமாக சிவபெருமானின் கோயில்கள் விளங்கி வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தங்கள் வாழ்க்கையில் அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர். வானை மட்டும் கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ கோவில்களில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகின்றார். குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னர்கள் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கலையின் பொற்களஞ்சியமான கோயில்களை கட்டி அதில் சிவபெருமானை தெய்வமாக வைத்து வணங்கி வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.
அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றுதான் தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் கண்ணீஸ்வரமுடையார் எனவும் தாயார் அறம்வளர்த்த நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாக்கக்கூடிய முல்லையாற்றில் நோய்களை தீர்க்கும் மூலிகை சக்தி அதிகம் நிறைந்து காணப்படுகிறது. அந்த முல்லையாற்றின் கரையில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்திருப்பது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. பார்வை இல்லாதவர்கள் மற்றும் பார்வை குறைவு உள்ளவர்கள் இங்கு வந்து வீற்றிருக்கக்கூடிய இறைவனை வழிபட்டால் அது விரைவில் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மிகப்பெரிய முல்லையாறு இந்த கோயிலின் தீர்த்தமாக கருதப்படுகிறது. இந்த நதியில் மூலிகை சக்தி அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இங்கு தீர்த்தம் ஆடி வழிபட்டால் நோய்கள் விரைவில் நிவர்த்தி அடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
இந்த பகுதியை வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்தார். முன்வினை பயன் காரணமாக அந்த மன்னனுக்கு பார்வை குறைபாடு இருந்துள்ளது. சிறிது காலம் தாண்ட தாண்ட அவருடைய பார்வை பறிபோனது. இதனால் மன்னன் மிகுந்த மன வருத்தம் அடைந்து வந்துள்ளார்.
பார்வையில்லாத காரணத்தினால் மன்னன் கஷ்டத்தில் அனைத்து கடவுள்களையும் நினைத்து வழிபட்டு வந்துள்ளார். குறிப்பாக சிவபெருமானை உணர்ச்சி பெருக்கோடு வழிபாடு செய்து வந்துள்ளார். அதன் பின்னர் அரண்மனையில் இருக்கக்கூடிய மூத்தவர்களின் ஆலோசனையின் படி முல்லை ஆற்றங்கரையில் இருக்கக்கூடிய கௌமாரி அம்மனை வணங்கச் சென்றுள்ளார்.
கருணை கடவுளாக விளங்கக்கூடிய கௌமாரியம்மன் வீரபாண்டிய மன்னனின் வேண்டுதலை கண்டு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு ஒரு கண்ணின் பார்வையை மட்டும் கொடுத்துள்ளார். மறு கண்ணின் பார்வையை பெற வேண்டும் என்றால் சிவ லிங்கத்தில் வழிபடும்படி அவர் மன்னனிடம் கூறியுள்ளார்.
மாரியம்மனின் ஆலோசனையை ஏற்று வீரபாண்டிய மன்னன் அவ்வாறு அங்கு இருந்த சிவலிங்கத்தை வழிபட்டுள்ளார். மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தனக்கு ஒரு கோயிலை கட்டும்படி கேட்டுக்கொண்டார். உடனே வீரபாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பு வழிபட்டார். அதன் பின்னர் வீரபாண்டிய மன்னனுக்கு கண்பார்வை தெரிய தொடங்கியது. அதன் காரணமாகவே இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானுக்கு கண்ணீஸ்வரமுடையார் என்ற திருநாமம் வழங்கப்பட்டது.