Gowmaariyamman Temple: செவ்வாய் தோஷம் போக்கும் கௌமாரியம்மன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gowmaariyamman Temple: செவ்வாய் தோஷம் போக்கும் கௌமாரியம்மன்!

Gowmaariyamman Temple: செவ்வாய் தோஷம் போக்கும் கௌமாரியம்மன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 23, 2022 06:23 PM IST

வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

கௌமாரியம்மன் கோயில்
கௌமாரியம்மன் கோயில்

பின்னர் சிவனின் ஆணைப்படி கௌமாரியம்மன் வழிபட்டு அதற்குப் பிரதிபலனாக இந்த கோயிலை கட்டியதாகவும் கூறுகிறது தல வரலாறு. இந்த கோயிலில் அம்மன் கன்னி தெய்வமாக காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்கள் ஒன்றாக கருதப்படுகிறது.

கண் நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனை தூய உள்ளத்துடன் வணங்கி தீர்த்தம் பெற்று சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோயிலின் முன்பு கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்புத்தடி மண்டபம் அமைந்துள்ளது.

இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடப்படுகிறது. அதை கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தில் கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு அன்னை கெளமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார். பிரகாரத்தை சுற்றி வரும்போது தெற்கே விநாயகர், வடக்கே நவகிரக மண்டபமும் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22 ஆவது நாள் 8 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது.

இதில் கொடியேற்றம் நடந்த நாள் முதல் 21 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21 நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டுமே படைக்கப்படும். நோய்களுக்கு நிவாரணம், வேலை வாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் பரவசம் அடைகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால் அக்னி சட்சி சுமந்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோய் உள்ளவர்கள் சேற்றை உடலில் பூசி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

Whats_app_banner