வியர்த்தபடி காட்சியளிக்கும் சிவகாமி.. வெட்டு காயத்துடன் பூலாநந்தீஸ்வரர்.. கட்டியணைத்த மன்னன்
சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ உலகம் முழுவதும் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் உள்ள சிறப்பு மிகுந்த கோயிலாக திகழ்ந்து வருவது தேனி மாவட்டம் சின்னமனூர் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் மூலவராக பூலாநந்தீஸ்வரர் மற்றும் தாயார் சிவகாமி கோயிலில் வீற்றிருக்கின்றனர்.
Poolanantheeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர்.
உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அளிக்க முடியாத சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கோயிலில் இருக்கக்கூடிய கட்டிடக்கலை தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை விட மிகவும் சிறப்பாக இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடல் கடந்தும் பல வெளிநாடுகளுக்குச் சென்று மன்னர்கள் போரிட்டு அந்த நிலத்தை வென்று அங்கு சிவபெருமானுக்கு கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். மன்னர்கள் சண்டை போட்டுக் கொண்டாலும் அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ உலகம் முழுவதும் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் உள்ள சிறப்பு மிகுந்த கோயிலாக திகழ்ந்து வருவது தேனி மாவட்டம் சின்னமனூர் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் மூலவராக பூலாநந்தீஸ்வரர் மற்றும் தாயார் சிவகாமி கோயிலில் வீற்றிருக்கின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் அளிக்கின்றார். இந்த கோயிலில் லிங்கம் வெட்டுப்பட்ட காயத்துடன் காணப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவகாமி தாயார் எப்பொழுதும் வியர்த்த முகத்தோடு காட்சி அளிக்கிறார். அது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் வீச்சு இருக்கக்கூடிய லிங்கம் எவர் எந்த உயரத்தில் இருந்து காண்கின்றார்களோ அதே உயரத்தில் காட்சியளிப்பார் என கூறப்படுகிறது. அதேபோல இந்த ஊரில் இருப்பவர்கள் மரணித்தால் அவர்களுடைய எலும்புகள் சுரப்பு நதியில் விழுந்தால் கல்லாக மாறும் என்பது அதிகமாக இருந்து வருகிறது.
மன்னர் ஆலிங்கனம் செய்த அடையாளத்தின் காரணமாக இப்பொழுதும் லிங்கத்தின் மீது மன்னனின் மார்பு கவசம் தடம் காணப்படுகிறது. அது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. எங்க வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் எத்தனை முறை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்தாலும் அவருடைய முகம் வியர்த்தபடியே இருப்பது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது.
தல வரலாறு
இங்கு இருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாய் சுரபி நதி அருகே முளைத்துள்ளார். காட்டுக்குள் சுயம்புலிங்கமாய் இருந்த சிவபெருமானுக்கு சாபம் பெற்ற கற்பகதரு முட்பூலாவாக தோன்றி அவரைச் சுற்றி பூலாவனமாக நிழல் கொடுத்து வந்துள்ளது.
அந்த பகுதியை ஆண்டு வந்த ராஜசிங்க பாண்டியன் சுரபி நதிக்கு அருகில் ஒரு முறை தங்கி இருந்தபோது அவருக்காக ஆயன் ஒருவன் பால் கொண்டு வந்துள்ளார். அடிக்கடி வரும் பொழுது அங்கே இருந்த பூலா மரத்திற்கு அருகே ஆயன் அடிக்கடி தடுக்கி விழுந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மன்னர் அந்த மரத்தின் வேரை கோடரியால் வெட்டியுள்ளார்.
வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. உடனே அந்த இடத்தை ராஜசிங்க மன்னன் தோண்டி பார்த்த பொழுது அங்குலிங்கம் இருந்துள்ளது. உடனே விண்ணை தொடும் அளவிற்கு அந்த லிங்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பின்னர் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த லிங்கத்தின் அவருடைய அளவுக்கு வந்து நின்றது. ஆனந்தத்தோடு அந்த லிங்கத்தை மன்னர் கட்டித்தழுவிக்கொண்டார். அதிலிருந்து அவரவர் அளவுக்கு லிங்கம் காட்சி கொடுக்கின்ற காரணத்தினால் அவர் அளவுகளவானவர் என அழைக்கப்பட்டார்.