தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thaipusam 2024: வேதனை தீர்க்கும் வேல்.. முருகனிடம் முருகனையே கொடுத்த பார்வதி

Thaipusam 2024: வேதனை தீர்க்கும் வேல்.. முருகனிடம் முருகனையே கொடுத்த பார்வதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 07:45 AM IST

Thaipusam 2024: பார்வதி தேவியிடம் முருகப் பெருமான் வேல் பெற்ற திருநாள்தான் தைப்பூசத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

முருகப் பெருமான்
முருகப் பெருமான்

இந்த திருநாளில் முருகப்பெருமான் எங்கு எல்லாம் வைத்திருந்து அருளாசி வழங்குகின்றாரோ அந்த இடத்தில் எல்லாம் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும். தைப்பூசத்திற்கும் முருகப்பெருமானுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து இங்கே காண்போம்.

முருகன் அவதாரம்

 

பார்வதி தேவி சிவபெருமானை பிரிந்து இந்த பூலோகத்தில் பிறந்தார். உலகத்தில் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டும் என கடுமையான தவத்தை மேற்கொண்டார். அப்போது சிவபெருமானும் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.

பார்வதி தேவியின் தவத்தை சுபபெருமான் அறிய வேண்டும் என்பதற்காக தேவர்கள் வேண்டுகோள் வைத்து மன்மதன் சிவபெருமான் மீது காமக் கணைகளை தொடுத்தார். இதனால் தியானத்திலிருந்து கலைந்த சிவபெருமான் பார்வதி தேவியின் தவத்தை அறிந்தார்.

அதற்குப் பிறகு பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு வந்த தேவர்கள் பார்வதி தேவிக்கு நிகராக எங்களுக்கு ஒரு சக்தி வேண்டும் என சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். அப்போதுதான் சிவபெருமான் நெற்றி கண்ணில் இருந்து தீப்பொறிகளை வெளியிட்டு ஆறுமுகமான முருக பெருமானை உருவாக்கினார்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த தீப்பொறிகளை தாங்கிக் கொண்டு சரவணப் பொய்கையில் வாயு பகவான் அந்த தீப்பொறிகளை சேர்த்தார். அதிலிருந்து உருவான ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் வளர்த்தனர்.

அதற்குப் பிறகு பூமிக்கு வந்த பார்வதி தேவி குழந்தைகளை கையில் எடுக்க அந்த ஆறு குழந்தைகளும் ஆறுமுகம் மற்றும் 12 கைகள் கொண்ட ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அதன் பின்னர் மக்களுக்கு துன்பம் கொடுத்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக 11 சக்திகளை ஒன்றிணைத்து வெற்றிவேலை முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி ஆயுதமாக கொடுத்தார் அந்த திருநாள் தைப்பூசத் திருநாளாக போற்றப்பட்டு வருகிறது.

தைப்பூச விரதம்

 

வீட்டில் முருகப் பெருமான் புகைப்படம் அல்லது மேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து கந்தனின் பதிகங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம். காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு முருகனை நினைத்து வெள்ளை அல்லது சிவப்பு மலர்கள் கொண்டு முருக பெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம். முடியாதவர்கள் எந்த பூவை கொண்டு வேணாலும் அர்ச்சனை செய்யலாம்.

சர்க்கரை பாயாசம் அல்லது இனிப்பு பொருட்களை நைவேத்தியமாக படைத்து மனதார முருகனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் முருக பெருமானின் வழிபட்டு உங்கள் வேண்டுதல்களை அவரிடம் முறையிடலாம் என வழிபாடு செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

தைப்பூச நேரம்

 

இன்று இரவு 11.56 வரை பௌர்ணமி திதி இருக்கின்ற காரணத்தினால் முழு நாளையும் பௌர்ணமி திதி நாளாக எடுத்துக் கொள்ளலாம் பூச நட்சத்திர திருநாள் காலை 9.14 மணிக்கு தொடங்குகின்ற காரணத்தினால் பௌர்ணமி திதி மற்றும் பூச நட்சத்திரம் இணையும் நேரமான காலை 9.20 முதல் 10.30 வரை தைப்பூச வழிபாடு செய்யலாம். மாலை நேரத்தில் 6.15 முதல் 7.30 மணி வரை தைப்பூச வழிபாடு செய்தால் பலன்கள் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel