தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Mahadasha: 20 ஆண்டுகள் ராஜ வாழ்கை தரும் சுக்கிர மகா தசை வந்து விட்டது

Sukra Mahadasha: 20 ஆண்டுகள் ராஜ வாழ்கை தரும் சுக்கிர மகா தசை வந்து விட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 07, 2023 11:59 AM IST

சுக்கிர மகாதசை சிறப்பாக இருந்தால் வாழ்க்கையில் செல்வந்தராக மாறுவார்கள் என கூறப்படுகிறது.

சுக்கிர மகாதசை
சுக்கிர மகாதசை

சுக்கிரன் ஆதிக்கம் இல்லாமல் இருந்துவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பல்வேறு துன்பங்களைச் சந்திப்பீர்கள் என கூறப்படுகிறது. ராஜ வாழ்க்கையைக் கொடுக்கும் சித்திரம் என் மகா தசை ஒருவரின் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நீடிக்கும்.

அப்படி மகா தசை உங்கள் ஜாதகத்தில் இருந்து விட்டால் மகிழ்ச்சி, செல்வம், அழகு, ராஜ வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

மகா திசை பலன்கள்

ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தைத் தானாகப் பெறுவார்கள் என ஆன்மீகம் கூறுகிறது. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். சுக்கிரன் உங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை அன்பும் நிறைந்த வாழ்க்கையும் கொடுப்பார்.

சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் பல்வேறு விதமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். சுக்கிரனின் மகாதசை அந்த நபருக்கு அசுப பலன்களைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துவிடும். பல்வேறு விதமான அசுப பலன்கள் கிடைக்கும். அதனைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

பரிகாரங்கள்

சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமியுடன் சுக்கிர பகவானை வழிபட்டால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

லட்சுமி தேவியை வழிபாடு செய்துவிட்டு அரிசி அல்லது பாலால் செய்யப்பட்ட இனிப்புகளைத் தானமாகக் கொடுத்தார் சுக்கிரன் பலமாகும்.

வெள்ளிக்கிழமை அன்று எறும்புகளுக்கு மாவு அல்லது சர்க்கரையை உணவாகக் கொடுத்து வழிபடலாம். இந்த பரிகாரத்தின் மூலம் பல சுக்கிர தோஷத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று நெய், தயிர், பால், வெள்ளை முத்து, வெள்ளை ஆடை உள்ளிட்ட பொருட்களைத் தானமாக கொடுத்தால் சுக்கிரனின் பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடைகளை அறிய முயற்சி செய்யுங்கள் முடிந்தவரை வெள்ளை பொருட்களைப் பயன்படுத்துங்கள் அது உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானைப் பலமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்