தமிழ் செய்திகள்  /  Astrology  /  Sabarimala Ayyappan Temple Panguni Uthiram Festival

Sabarimala: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 25, 2023 01:47 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் மார்ச் 27ஆம் தேதி அன்று பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்படுகிறது.

சபரிமலை
சபரிமலை

அதே சமயம் மாத பூஜை திருவிழா காலங்களில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். மாதம்தோறும் பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெறுவது வாடிக்கையாகும்.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் படி பூஜை மார்கழி மாதத்தில் மண்டல பூஜை, தை மாதத்தில் மகர விளக்குப் பூஜை மற்றும் மகரஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாராட்டு திருவிழா நடைபெறும். சித்திரை மாதத்தில் விஷு கனி விழா நடைபெறுவது மிகவும் புகழ் பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்க உள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதன் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ஆனது நாளை 26 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. நடைதிறக்கப்பட்டாலும் பூச்சிகள் எதுவும் நடைபெறாது.

கொடியேற்றுத் திருநாளன்று காலை தந்திரி கண்டரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படும். அன்றைய தினத்திலிருந்து தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதனைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவு நாளான ஏப்ரல் ஐந்தாம் தேதி பம்பை ஆற்றில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பத்தாம் நாள் திருவிழாவான அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்