Tamil News  /  Astrology  /  Mustard Remedy For Solving Money Problems
கடுகு பரிகாரம்
கடுகு பரிகாரம்

Money Problem: கடுகு பரிகாரத்தால் கடன் சிக்கல் தீருமா? - வாங்க தெரிஞ்சுக்கலாம்!

16 March 2023, 13:22 ISTSuriyakumar Jayabalan
16 March 2023, 13:22 IST

பண சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கடுகு பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.

பணம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இதனால் ஏற்படக்கூடிய பலன்களும் பல உண்டு, சிக்கல்களும் பல உண்டு. ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருக்கும் இந்த கடன் சிக்கல்கள் என்பது கட்டாயம் இருக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆன்மீகத்தில் இதனை போக்குவதற்குப் பல பரிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த கடுகு பரிகாரம். இது மிகவும் எளிமையான பரிகாரமாகும். இந்த பரிகாரத்தின் முறைகள் குறித்து இங்கே காண்போம்.

பரிகார முறை

இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டும். பரிகாரத்தைச் செய்யும் போது தனி அறை அல்லது வரவேற்பு அறையில் தனியாகப் படுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகு எடுத்துக் கொண்டு தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ள வேண்டும். அந்த கடுகை கிழக்கு பார்த்த வாரம் நின்று கொண்டு நீங்கள் படுத்து உறங்கக் கூடிய இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு விட வேண்டும்.

அதன் நடுவில் பாய் அல்லது மெத்தை போட்டுப் படுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பமாகும். மறுநாள் எழுந்தவுடன் முதல் வேலையாகப் பல் தேய்த்து முகம் கழுவி விட்டு நான்கு முலையிலும் கொட்டிய கடுகை ஒரு பேப்பரில் ஒன்று விடாமல் அள்ளிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கடுகை ஒரு அகல் விளக்கில் போட்டு கற்பூரம் ஏற்றிக் கொளுத்தி விட வேண்டும். நெருப்பில் இந்த கடுகுகள் வெடித்து எரிந்து முடிந்து விடும். இந்த பரிகாரத்தைச் செய்து முடித்த சில நாட்களில் கடன் சிக்கல் முடிவுக்கு வருவதைக் காண முடியும் எனக் கூறப்படுகிறது.

வாரத்தில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தைச் செய்யலாம். உதாரணத்திற்கு இந்த திங்கட்கிழமை செய்தால் அடுத்த வாரத் திங்கட்கிழமை செய்ய வேண்டும். தொடர்ந்து இதுபோல் ஒவ்வொரு திங்கட்கிழமை செய்ய வேண்டும்.

பரிகாரம் மட்டும் செய்துவிட்டால் எந்த சிக்கலும் தீராது. கடன் சிக்கல்கள் தீருவதற்கான மற்ற வழிகளையும் செய்ய வேண்டும். இந்த பரிகாரமானது கடன் சிக்கல்களைச் சரி செய்வதற்கான ஒரு வழிமுறையைச் செய்து கொடுக்கும் தவிர, பரிகாரத்தால் மட்டும் எந்த சிக்கல்களையும் தீர்த்துவிட முடியாது.

டாபிக்ஸ்