தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆபத்தை சந்திக்க போகும் மூன்று ராசிகள்.. மீன ராசியில் நுழையும் செவ்வாய்.. சிக்கி தவிக்க போகும் ராசி இவர்கள் தான்!

ஆபத்தை சந்திக்க போகும் மூன்று ராசிகள்.. மீன ராசியில் நுழையும் செவ்வாய்.. சிக்கி தவிக்க போகும் ராசி இவர்கள் தான்!

Divya Sekar HT Tamil
Apr 06, 2024 12:26 PM IST

வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வரும் நிலையில் செவ்வாய் பகவான் அவரோடு இணைகின்றார். இவர்களின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது

மீன ராசியில் நுழையும் செவ்வாய்
மீன ராசியில் நுழையும் செவ்வாய்

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் துணிவு, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வரும் நிலையில் செவ்வாய் பகவான் அவரோடு இணைகின்றார். இவர்களின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு ஆபத்து உருவாக உள்ளது. அந்த வகையில் கஷ்டத்தை அனுபவிக்க போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷம்

 உங்கள் ராசிகள் 12வது வீட்டில் அங்கார பிரயோகம் உருவாகியுள்ளது. இதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்கள் பேச்சைக் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கன்னி 

 உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்பதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படும்.

கும்பம்

 உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகி உள்ளது. இதனால் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்