தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  செவ்வாய் பகவான் விளையாடுகிறார்.. கும்பத்தில் சம்பவம்.. பணமழை கொட்டப்போகுது.. யோகராசிகள்

செவ்வாய் பகவான் விளையாடுகிறார்.. கும்பத்தில் சம்பவம்.. பணமழை கொட்டப்போகுது.. யோகராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 02:47 PM IST

Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்ற அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

அதேசமயம் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்ற அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய திட்டங்கள் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நல்ல காலம் உங்களுக்கு பிறந்து விட்டது. சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொறுமையாக இருந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்கள் வரப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய முதலீடுகள் நல லாபத்தை பற்றி தரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதிகளில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel