தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs Where Life Will Change Due To The Transfer Of Lord Surya

Money Luck: கும்பத்தில் வருகிறார் சூரியன்..குபேரனாக போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2024 12:29 PM IST

Lord Saturn: சூரிய பகவான் இடமாற்றத்தால் வாழ்க்கை மாறப் போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது. மகர ராசியில் சூரிய பகவான் நுழையும் நாளை மகர சங்கராந்தி என இந்தியாவின் வடக்கு பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். இந்நிலையில் சனி பகவான் ராசியான கும்ப ராசியில் வரும் பிப்ரவரி மாதம் சூரிய பகவான் நுழைகின்றார்.

சூரிய பகவானும் சனி பகவானும் ஒன்று சேர போகின்றனர். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

நீங்கள் சூரிய பகவானை அதிபதியாக கொண்டு உள்ளீர்கள் உங்களுக்கு சூரிய பகவான் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில் இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டை பார்க்க போகின்றார். அதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

கும்ப ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு இயக்கப் போக்க பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகப் பயணம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானம் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வருமானங்கள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.