தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: சூரியனால் ஒளிமயமான புத்தாண்டை பெறும் ராசிகள்

Lord Surya: சூரியனால் ஒளிமயமான புத்தாண்டை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 24, 2023 11:39 AM IST

சூரிய பகவானால் உச்சம் செல்லப் போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைந்தார்.

குருபகவானும் சூரிய பகவானும் நண்பர்கள் என்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் சிறப்பானதாக அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை சில ராசிகளுக்கு யோகம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தற்போது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு வேலை முயற்சி வெற்றி அளித்த தரும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல லாபத்தை பெறலாம். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சொத்துக்களை குவிக்க போகின்றார். உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்து வருகிறார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிலுவையில் இருந்த முக்கியமான வேலைகள் முடிவடையும். நல்ல லாபத்தை உங்களுக்கு சூரிய பகவான் கொடுப்பார். பெற்றோருடன் இருந்த சிக்கல்கள் விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு இரு மடங்காக தன்னம்பிக்கையை கொடுக்க போகின்றார். உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலை தொடங்க நினைத்தால் அது வெற்றியில் முடியும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்