தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lakshmi Narayana Yoga Is Coming And Zodiac Signs That Will Win In Business

Lakshmi Narayana Yoga: வருகிறது லட்சுமி நாராயண யோகம்.. தொழிலில் ஜெயிக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 29, 2024 02:02 PM IST

புதிதாக மகர ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.

லட்சுமி நாராயண யோகம் எந்த ராசிக்கெல்லாம் நன்மை என்பதை பார்க்கலாம்
லட்சுமி நாராயண யோகம் எந்த ராசிக்கெல்லாம் நன்மை என்பதை பார்க்கலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்: இந்த ராசியினர் லட்சுமி நாராயண யோகத்தால் செல்வ வளத்தைப் பெறவுள்ளனர். இக்கால கட்டத்தில் தொழில்முனைவோர்கள், சிறு வியாபாரிகள், குடிசைத்தொழில் செய்பவர்கள், தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வருமானம் பெருக அதிக வாய்ப்புகள் உள்ளன. உடல் நலம் மேம்படும்.

மிதுனம்: இந்த ராசியினர் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் இத்தனை நாட்களாக வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இல்லறத்துணையை இழந்தவர்களுக்கு மறுதிருமணம் கைகூட வாய்ப்புண்டு. வருமான உயர்வால் நீங்கள் வெகுநாட்களாக வாங்க நினைத்தப் பொருட்களை வாங்கலாம். பணியில் பாராட்டுதல்கள் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய பேச்சுகள் வந்து உங்களை மகிழ்விக்கும்.

கடகம்: இந்த ராசிக்கு 7ஆம் இடத்தில் இந்த லட்சுமி நாராயணயோகம் உருவாகியிருப்பதால் குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே இருந்த பிணக்குகள் குறையும். பிரிந்தவர்கள் ஒருவரையொருவர் தூரத்தில் இருந்தாலும் நன்கு புரிந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை மெல்ல மெல்ல வலுப்படும்.

தனுசு: இந்த ராசிக்கு நீங்கள் இத்தனை நாட்களாக சந்தித்த கஷ்டமான காலம் மறையும். நினைவாற்றல் அதிகரித்து பணியில் நற்பெயர்களைச் சம்பாதிப்பீர்கள். உங்களது பணித்திறனைப் பார்த்து வேறு ஒரு நிறுவனத்தில் பணி தர சிலர் முன்வருவார்கள். நிதி நிலைமேம்பட்டு வங்கிக் கணக்கில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். கணவன் - மனைவி இடையே விட்டுக்கொடுத்துப் போய் காதல் பலப்படும்.

மகரம்: மகரத்தில் இந்த லட்சுமி நாராயணயோகத்தால் வெகுநாட்களாக நினைத்த வீடு, வீட்டடி மனைகள் வாங்கும் சூழல் உண்டாகியுள்ளது. இக்கால கட்டத்தில் உங்கள் இனிமையான பேச்சினால் தொழிலோ அல்லது பணியிடத்திலோ பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிலும் அன்புடன் நடந்துகொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்