தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீனத்தில் இடியாய் விழப்போகும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. தலைகீழாக அடி விழுவது உறுதி

மீனத்தில் இடியாய் விழப்போகும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. தலைகீழாக அடி விழுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 12:40 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் மீன ராசி பயணம் ஆனது சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்
செவ்வாய்

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் மீன ராசி பயணம் ஆனது சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சவால்களை சமாளிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தராது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய தொழில் தொடங்க நினைத்தால் சற்று தள்ளி வைப்பது நல்லது. இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான தடைகளை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகம் உருவாகும். சிறிய வேலையை முடிப்பதற்கு கூட பெரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அதிக உழைப்பு உங்களுக்கு தேவைப்படுகிறது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படும். தொழிலில் பல நஷ்டங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel