தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வீடு புகுந்து அடிக்கப் போகும் செவ்வாய்.. தப்பிக்கவே முடியாத ராசிகள்.. செவ்வாய் பகவானால் அனுபவிக்கப் போவது உறுதி..!

வீடு புகுந்து அடிக்கப் போகும் செவ்வாய்.. தப்பிக்கவே முடியாத ராசிகள்.. செவ்வாய் பகவானால் அனுபவிக்கப் போவது உறுதி..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 05:06 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு நண்பர்களும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் கொடுக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

செவ்வாய்
செவ்வாய்

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு நண்பர்களும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் கொடுக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களால் வாக்குவாதங்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமைந்தாலும் சற்று தள்ளி வைப்பது நல்லது. மிகவும் பொறுமையாக இருந்தால் முன்னேற்றத்தை காணலாம். திடீர் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் நீங்கள் மிகவும் சிரமப்பட நேரிடும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் உங்களை அதிக வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும். வசதி மற்றும் ஆடம்பரங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். சிறிய வேலையை முடிப்பதற்கு கூட அதிக நேரம் எடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் நஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுமையாக கையாள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel