தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury: புதன் வெளுத்து விட போகும் ராசிகள் இவர்கள்தான்

Mercury: புதன் வெளுத்து விட போகும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 14, 2024 01:55 PM IST

புதன் பெயர்ச்சியால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கனியை மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று நுழைந்தார். இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்வதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

புதன் பகவான் மகர ராசிக்குள் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகள் சிரமமான சூழ்நிலைகளை அனுபவிக்க போகின்றனர். அந்த வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் நுழைந்துள்ளார். உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலை உருவாகும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிக பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும். மதிப்பு மிக்க பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பயணங்கள் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சில சிரமங்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். தொழிலில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் நுழைந்துள்ளார். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. மிகவும் பொறுமையாக நடந்து கொண்டால் வெற்றி பெறலாம். வீட்டில் சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விஷ்ணு பகவானின் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். இருப்பினும் எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel