தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck: குழந்தையிலிருந்து குரு பகவானின் அருள் பெற்ற ராசிகள்

Guru Luck: குழந்தையிலிருந்து குரு பகவானின் அருள் பெற்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 23, 2023 10:30 AM IST

குழந்தையிலிருந்து குரு பகவானின் முழு அருளை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனால் நவகிரகங்களுக்கும் பிரியமான சில ராசிகள் இருக்கும். 

பிறப்பிலேயே அந்த ராசிகளுக்கு சில அடிப்படை அதிர்ஷ்டங்கள் இருக்கும். அந்த வகையில் குழந்தை பருவத்தில் இருந்து குரு பகவானின் யோகம் பெற்ற சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான்

குரு பகவான் அறிவு, செல்வம், தன்னம்பிக்கை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், வெற்றி, மரியாதை உள்ளிட்டவருக்கு காரணியாக விளங்குகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செய்ய குரு பகவான் ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

ஒரு ராசியில் குரு பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். இவர்களுக்கு எப்போதும் குரு பகவான் ஆசி இருக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் பிறப்பிலிருந்து உங்களுக்கு அருள் ஆசியை வழங்கிக் கொண்டிருப்பார். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாது அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்ற சூழ்நிலைகளை செய்து தருவார்.

மீன ராசி

 

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். உங்கள் ராசியில் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். அந்த வகையில் எப்போதும் அவருடைய ஆசி உங்கள் ராசியின் மீது இருக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்திற்கு தேவையான அனைத்து லாபங்களையும் அள்ளிக் கொடுப்பார். குரு பகவானின் அருளால் சமூகத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்