தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Do Not Trust Anyone At Birth

Horoscope: இயற்கையிலேயே மற்றவர்கள் சொல்வதைக் கேட்காத ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 12:03 PM IST

பிறப்பிலேயே யாரையும் நம்பாத ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராசி பலன்
ராசி பலன்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி எல்லாவிதமான செயல்களையும் ஜோதிட சாஸ்திரம் தீர்மானிக்கின்றது. ஒவ்வொரு ராசியும் அவர்களின் ஆளுமைக்குரிய ஆழமான நுண்ணறிவுகளை பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு ராசியும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருக்கும். தனக்கென சிறப்பான குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப சில சிறப்பான குணாதிசயத்தோடு வாழ்வார்கள்.

அந்த வகையில் இயற்கையிலேயே வெளிப்புற கருத்துகளுக்கு எந்தவித கவனமும் செலுத்தாமல் தனது சொந்த செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சில ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

நீங்கள் சுதந்திரமான மனநிலை கொண்டவர்கள். செவ்வாய் கிரகத்தின் ராசியாக விளங்கக்கூடிய நீங்கள். எப்போதும் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவீர்கள். தன்னுடைய சிந்தனைக்காக எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் செய்வீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப செயல்படக்கூடியவர்கள் நீங்கள்.

சிம்ம ராசி

 

வலிமைமிக்க சூரிய பகவானால் ஆழப் படும் ராசி நீங்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு எப்போதும் கவனம் செலுத்தாமல் தன்னுடைய சிந்தனைக்கு செயல்படக் கூடியவர்கள் நீங்கள். அது எந்த அளவிற்கு இருந்தாலும் அந்த அளவிற்கு செல்லக்கூடிய குணாதிசயத்தை கொண்டுள்ள ராசிகளில் நீங்களும் ஒருவர். தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வீர்கள். தனித்துவமான குணாதிசயத்தோடு வாழக்கூடிய ராசிகளில் நீங்களும் ஒருவர்.

விருச்சிக ராசி

 

எப்போதும் வருமாக இருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்த விருப்பம் கொண்டவர்கள். புதிரான மனநிலை கொண்ட நீங்கள் மற்றவரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. பொது கருத்துக்கள் வரும் பட்சத்தில் அதனை கண்டு கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள். எப்போதும் தனது செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களை சற்று தூரத்தில் வைத்திருப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel