தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Rasis: மற்றவர்கள் கெட்டவர்களாக பார்க்கும் ராசிகள் இவர்கள்தான்

Bad Rasis: மற்றவர்கள் கெட்டவர்களாக பார்க்கும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 23, 2023 11:28 AM IST

பிறப்பிலேயே தீயவர்களாக மற்றவர்களிடத்தில் உணரப்படும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கெட்டவர்களாக பார்க்கும் ராசிகள்
கெட்டவர்களாக பார்க்கும் ராசிகள்

அந்த கிரகங்கள் எதற்கு காரணியாக விளங்குகின்றதோ, அதனை ராசிக்காரர்கள் பெற்றிருப்பார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் மற்ற ராசிகளோடு ஒப்பிடுகையில் சில ராசிக்காரர்கள் தீய பண்புகளை பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

எப்போதும் உற்சாகமாக இருக்க ஆசைப்படுவீர்கள். ஆனால் அது மற்றவர்களிடத்தில் உங்களை தீமைகளாக காட்டும். ஒரு இடத்தில் தங்களை உறுதிப்படுத்த நினைப்பீர்கள். அது மற்றவர்களிடம் உங்களை தவறாக காட்டும். போட்டி மனப்பான்மை மற்றவர்களிடத்தில் உங்களைத் தீயவர்களாக காட்டும்.

விருச்சிக ராசி

 

உணர்வுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். இதன் மூலம் அதிக உறவுகளை நீங்கள் பெறக்கூடும். ஆனால் அதை கையாள்வது சில ரகசியங்களை மேற்கொள்பவர்கள் நீங்கள். மறைமுகமாக பல்வேறு விதமான நோக்கங்களை வெளிப்படுத்தக் கூடியவர்கள் நீங்கள். உங்களிடம் மர்மங்களும் அதன் நோக்கங்களும் ரகசியமாக இருக்கும்.

மகர ராசி

 

லட்சிய உணர்வு அதிகம் கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். தனக்குத் தேவை என்றால் அதன் மீது அதிக நாட்டம் கொண்டு அதற்காக போராடுவீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சுயநலத்தை மையமாகக் கொண்டு செயல்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் நீங்கள்.

கும்ப ராசி

 

சுதந்திரத்தை அதிகம் விரும்பக் கூடியவர்கள் நீங்கள். அதனால் எப்போதும் தனிப்பட்டு காணப்படுவீர்கள். சுய நலத்திற்காக இந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். உங்கள் சிந்தனைகளும் அதில் வெளிப்படும் புதுமைகளும் மற்றவர்களுக்கு தீய எண்ணம் கொண்டவர்களாக உங்களை பிம்பப்படுத்தும்.

மிதுன ராசி

 

இடத்திற்கு ஏற்றார் போல தன்னை தகவமைத்துக் கொள்ளும் ராசிக்காரர்கள் நீங்கள். சில நேரத்தில் உங்களுடைய ஆளுமை திறன் சீரற்ற நடத்தையை ஏற்படுத்தக்கூடும். அவ்வப்போது கருத்துக்களை மாற்றக்கூடிய மனநிலை கொண்டவர்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்