தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Remedies For Early Marriage: திருமணத்தடை போக்கும் பரிகாரங்கள்!

Remedies for Early Marriage: திருமணத்தடை போக்கும் பரிகாரங்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 08, 2022 01:12 PM IST

திருமணத் தடையைப் போக்கும் வழிபாடுகள் குறித்து இங்கே காண்போம்.

திருமணத்தடை போக்கும் பரிகாரங்கள்
திருமணத்தடை போக்கும் பரிகாரங்கள்

திருமணத்தடையைப் பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்யலாம் என ஆன்மீகம் கூறுகிறது. சில முறையான பரிகாரங்கள் மூலம் இந்த திருமணத்தடையை நிவர்த்தி செய்யலாம். அவ்வாறு செய்யக்கூடிய பரிகாரங்கள் குறித்து இங்கே காண்போம்.

சனி தோஷ பரிகாரம்

நீதிமானாக விளங்கும் சனி பகவான், பாவங்களுக்கு ஏற்றவாறு பலன்களைத் தரக்கூடியவர். அந்த வகையில் சனி தோஷத்தால் சிலரது திருமணம் காலதாமதம் ஆகிறது. அவ்வாறு சனி தோஷத்தால் திருமண யோகம் தாமதமாகக் கூடியவர்கள் தான தர்மங்கள் செய்தால் அந்த தோஷம் விளக்கும். குறிப்பிட்டுக் கூற ஒன்றுமில்லை. அனைத்தையும் தானம் தர்மம் செய்யலாம்.

மற்றவர் திருமணத்திற்கு உதவுதல்

தோஷம் மட்டுமல்லாது நிதிநிலை காரணமாகக் கூட சிலருக்குத் திருமணம் ஆகாமல் இருக்கும். அதுபோல் வறுமையில் இருப்பவர்களுக்குத் திருமணம் செய்த முடிந்தவரை நிதி மற்றும் பொருள் உதவி செய்யலாம். இது போன்ற தான தர்மங்கள் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் பலன்களைத் தரும்.

விரதம்

பெண்களுக்கு இருக்கும் திருமணத் தடையை நீக்க 16 திங்கட்கிழமைகள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். முடிந்தவர்கள் ஜாலபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது அதிகமாகும்.

துர்க்கை அம்மன்

துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரத்தில் வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கோயில் பிரசாதம்

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்தை வீணாக்காமல் மற்றவர்களுக்குக் கொடுத்து தானம் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம். அதேசமயம் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால் திருமண தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

சுக்கிர பகவான்

ஜோதிடத்தின் படி ஜாதகத்தில் திருமண சாதகத்தை ஏற்படுத்தித் தரக்கூடியவர் சுக்கிர பகவான். அதிகாலை எழுந்து குளித்துவிட்டு குலதெய்வ வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிட்டும் எனக் கூறப்படுகிறது.

விநாயகர்

அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் நெய் தீபம் ஏற்றி இவ்விநாயகரை வழிபட்டால் திருமணத்திற்குச் சாதகமான சூழல் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

WhatsApp channel