குரு எண்ணிக்கை ஆரம்பம்.. அஸ்தமனத்தில் 3 ராசிகளுக்கு முரட்டு அடி.. கதறி ஓடுவது உறுதி
Guru Bhagavan: அஸ்தமன நேரத்தில் நவகிரகங்கள் சற்று மந்தமான சூழ்நிலையில் இருப்பார்கள். இதனால் சில சிக்கலான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவானால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் சென்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆகினார். குருபகவானால் அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் நல்ல பலன்கள் கிடைக்கும். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு பலன்கள் மாற்றமடையும்.
அஸ்தமன நேரத்தில் நவகிரகங்கள் சற்று மந்தமான சூழ்நிலையில் இருப்பார்கள். இதனால் சில சிக்கலான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவானால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்களால் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்
துலாம் ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலைகள் இருக்கும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களோடு சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்திற்கு அடுத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது.
மீன ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகின்ற காரணத்தினால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கக்கூடும். முக்கியமான வேலைகள் தள்ளிப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சிக்கல்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எந்த முடிவை எடுத்தாலும் ஒன்றுக்கு மூன்று முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறித்துக் கொள்வது நல்லது. விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
