தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி விரட்டி விரட்டி கொட்டுவார்.. அதிர்ஷ்டக்கார ராசிகளுக்கு பணமழை.. நட்சத்திரப் பெயர்ச்சி யோகம்

சனி விரட்டி விரட்டி கொட்டுவார்.. அதிர்ஷ்டக்கார ராசிகளுக்கு பணமழை.. நட்சத்திரப் பெயர்ச்சி யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 10:47 AM IST

Saturn Transit: சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும். ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும். ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனி நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் மகனும் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

மிதுன ராசி

 

சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றியாக அமையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel