தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: சனிபகவான் வரம் பெற்ற ராசிகாரர்கள் இவர்களே தான்!

Money Luck: சனிபகவான் வரம் பெற்ற ராசிகாரர்கள் இவர்களே தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 24, 2023 11:31 AM IST

சனிபகவான் வரம் பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது அவரது சொந்த ராசியான கும்ப ராசியில் வக்ரமாக பயணம் செய்து வருகிறார்.

இந்தாண்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை சனிபகவான் வக்ரமாக பயணம் செய்ய உள்ளார். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகம் பெறப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

பணி செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். தொடங்கிய காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களுக்கு செய்யும் அளவிற்கு உங்களுக்கு வரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தேவையான நேரத்தில் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான அனைத்தையும் சனி பகவான் செய்வார். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்