தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா? - வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா? - வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2023 12:30 PM IST

Saturday Vratham: சனிக்கிழமை விரதத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

பெருமாள்
பெருமாள்

சனிபகவானை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியவர் விஷ்ணு பகவான். தன் காரணமாகப் பெருமாள் சனி பகவானின் அதிபதி என்று அழைக்கப்படுகிறார். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் விஷ்ணு பகவானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும், சனிபகவானால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும். சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் சகல செல்வங்களும் பெற்று வாழ்வு செழிப்பாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாகச் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபட்டால் சனி பகவான் கொடுக்கக்கூடிய சங்கடத்திலிருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது. சனிக்கிழமை விரதம் குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. அது குறித்து இங்கே காண்போம்.

விரத முறை

விரதம் இருக்கும் பகல் நேரத்தில் பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்றபடி உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

பின்னர் மாலை நேரத்தில் விஷ்ணு பகவான் கோயிலுக்கு சென்று நல்லெண்ணையால் தீபம் ஏற்றி திருமாலை வழிபட்டு பின் இரவு நேரத்தில் உணவு எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

விரதத்தின் பலன்கள்

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிப்பது சிறப்பாகும். முக்கியமாகப் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் விசேஷம் எனக் கூறப்படுகிறது.

இந்த புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கும் பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாகச் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள், பெருமாளை வணங்கக் கூடியவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. சனிக்கிழமைகளில் இது மட்டுமல்லாமல் பல விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

சனிக்கிழமையின் சிறப்புகள்

அவசர காரியங்கள் இல்லாமல் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களைச் சனிக்கிழமைகளில் செய்யாமல் தவிர்த்தால் சிறப்பு.

சுப காரியங்களைச் சனிக்கிழமைகளில் செய்வதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என ஆன்மீகம் கூறுகிறது.

வழக்கு சம்பந்தமான சிக்கல்கள், பிரச்சனைகளை பேசி முடிக்கக் கூடிய வாய்ப்புகள், சமாதானம் பேசுதல் போன்றவற்றைச் சனிக்கிழமை நாட்களில் செய்யலாம்.

அரசியல் ரீதியான பல காரியங்களுக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நாளாகச் சனிக்கிழமை விளங்கி வருகிறது. எனவே இது போன்ற செயல்களைச் சனிக்கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்