Today Rasi Palan : மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் முழு விவரம்!
Today Rasi Palan : இன்று சந்திரன் சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரங்களில் நாள் முழுவதும் சஞ்சரிக்கிறார். மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சற்று மன அழுத்தத்தை உண்டாக்கும். மகர ராசிக்கு உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
மேஷம் - இன்று சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குடும்பம் மற்றும் பணியிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். அங்கு கருத்து வேறுபாடு அல்லது பிரிவினை அதிகரிக்கும். நாளின் தொடக்கத்தில், கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கிடைக்கும். குடும்பத்தில் மூத்தோரின் ஆசி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். ஆரோக்கியத்தில் சில கோளாறுகள் ஏற்படும்.
ரிஷபம் - நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். பெண்களுக்கு இனிமையான நாளாக இன்றைய நாள் அமையும் குடும்ப ஒற்றுமை மேம்படும். பிறந்த வீட்டில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். மன மகிழ்ச்சி, சந்தோஷம் கிட்டும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நிலவும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
மிதுனம் - வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும். பெண்களுக்கு சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் பெறும் சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சேவை துறை மற்றும் உணவுத்துறை சுற்றுலாத்துறை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல பெயரை கிடைக்கும்.
கடகம் - மிகச் சிறந்த நாள். கணவன் - மனைவி அன்னியோன்னியமாக இருப்பார்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். விருந்தினர் வருகை போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். அது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும் வீட்டிற்கு தேவையான நல்ல பொருட்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
சிம்மம் - சிறந்த நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும். இவைகளில் வெற்றியும் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். உத்யோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். ஒரு சில வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் கணவன் - மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும்.
கன்னி - கணவன் - மனைவி ஒற்றுமை சீராக இருந்து வரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். விநாயகர் வழிபாடு சிறந்தது. எதிர்பார்த்த பணம் வரும். கடனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். கணக்குத்துறை, சீருடை பணியாளர்கள் மருத்துவத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
துலாம் - நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் கிட்டும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நிலவும். திடீர் தனவரவு ஏற்படும். மாணவர்களின் கல்வி பளிச்சிடும். உடல் நலம் சீராக இருந்துவரும். தூக்கத்தில் நல்ல கனவுகள் வரும். பெண்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாள். கணவன் - மனைவி ஒற்றுமை மேம்படும்.
விருச்சிகம் - உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். சொந்த தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகமாகும். இறுதியில் வெற்றி கிடைக்கும். பங்கு மார்க்கெட் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு என்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். கணவன் - மனைவி அன்னியோன்யமாக இருப்பார்கள்.
தனுசு - உயர்கல்வி கற்றுக்கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் என்றாலும் செலவினங்கள் சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து பணம் வரவேண்டியுள்ளவர்களுக்கு இன்று அதற்கான முயற்சிகள் வெற்றி அடைவதற்கான நாள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும்.
மகரம் - இன்று சந்திராஷ்டமம். உங்களின் வேலை, பணியிடத்தில் புத்திசாலித்தனமாகவும், விவேகத்துடனும் செயல்படவும். சரியான திட்டமிடலுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பொறாமை உணர்வு ஏற்படும். பிற்பகலுக்குப் பின் ஒரளவு நன்மைகள் கிடைக்கும். உங்களின் திறமையால் சம்பாதித்த பணம் மற்றொன்றில் செலவிடப்பட வாய்ப்புள்ளது. செலவுகளால் சேமிக்க முடியாத நிலை இருக்கும். வேகத்தில் கவனம் தேவை. அடிபட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் - மிகச்சிறந்த நாள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அல்லது நீங்கள் விருந்தினராக செல்வது போன்ற இனிய நிகழ்வுகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிகழும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். நீங்கள் எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு வெற்றியும், உத்யோகத்திலிருப்பவர்களுக்கு உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய பேச்சுவார்த்தைகளும் நிகழ்வுகளும் மனதிற்கு சந்தோஷம் தருவதாக அமையும்.
மீனம் - இன்றைய நாள் நல்ல நாள். கணவன் - மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். பங்கு வர்த்தகத்தை பொருத்தவரை பில்டிங் புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் அயர்ன் அண்ட் ஸ்டீல் போன்றவற்றில் முதலீடுகளை குறைத்துக்கொள்வது வங்கித்தொழில், மருத்துவத்துறை போன்றவற்றில் முதலீடுகளை அதிகப்படுத்துவதும் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.