தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Kettai: சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும்..! கேட்டை நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Kettai: சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும்..! கேட்டை நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2024 10:30 PM IST

கேட்டைநட்சத்திரம் நான்கு பாதங்களும் விருச்சிக ராசியில் அமைந்துள்ளன. எதிர்வரும் குரு பெயர்ச்சியால் இந்த நட்சத்தினர் பெறப்போகும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கேட்டை நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்
கேட்டை நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் விருச்சிகம் ராசியில் இடம்பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள்.

குரு பெயர்ச்சியால் கேட்டை நட்சத்தினர் பெறும் பலன்கள்

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் விருச்சிகம் ராசியில் இடம்பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள்.

குரு பெயர்ச்சியால் கேட்டை நட்சத்தினர் பெறும் பலன்கள்

கேட்டை நட்சத்தினர் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள். கடந்த காலத்தில் சந்தித்த பிரச்னைகள் அனைத்தும் விலகும் காலமாக இந்த குரு பெயர்ச்சி உள்ளது.

மனகுழப்பங்கள் நீங்கி எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நன்மைகளை பெறுவீர்கள். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். போதுமான அளவில் வருமானம் இருக்கும். திருமணத்தில் தடை இருந்து வந்தவர்களுக்கு வரன் அமையும்.

சொந்த தொழில் செய்ய விரும்பிவோருக்கான காலம், நேரமும் வாய்ப்புகளும் அமையும். ஏற்கனவே தொழில் செய்து வந்தவர்களுக்கு லாபத்தை பெறுவீர்கள். சுய தொழிலில் இதுவரை இருந்து வந்த சுணக்கம் அகலும். நல்ல பணியாளர்கள் அமைவார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் பலனை பெறுவீர்கள். உற்சாகமாக செயல்படுங்கள்.

உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. எடுத்த காரியத்தை தள்ளிபோடாமல் உடனடியாக செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். சொத்துகள் வாங்குவதற்கான சூழல் உருவாகும்.

வேலையில் இருப்பவர்கள் நல்ல பலனை பெறுவீர்கள். பதவி உயர்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம். கடின உழைப்புக்கு உரிய பாராட்டை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவீர்கள்.

உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வு, மன சோர்வு ஏற்படலாம். உஷ்ணம் தொடர்பான வியாதிகள், தலையில் பிரச்னைகள், உடல் பருமன் பிரச்னைகளும் வரலாம். மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று உடல் கவனித்து கொள்ளுங்கள்

முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் அமையும். இதனால் மகிழ்ச்சியும் அடைவீர்கள். தேவையற்றி விரயங்கள் குறையும்.

பெண்களுக்கு நல்ல முன்னேறத்தை இந்த குரு பெயர்ச்சி தரும். எதிர்மறை கருத்துகளை கடந்து செயல்படுங்கள். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.

இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தையும், நன்மையும் பெறுவீர்கள். சுறுசுறுப்பாக செயலாற்றுவதன் மூலம் வளர்ச்சியை பெறுவீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்