தமிழ் செய்திகள்  /  Astrology  /  Best Day For Taurus, Leo, Scorpio - Today's Zodiac Result

ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறந்த நாள் - இன்றைய ராசி பலன்

Priyadarshini R HT Tamil
May 20, 2023 07:44 AM IST

இன்று ரிஷபம் உள்ளிட்ட 3 ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்கள் இருக்கும். சந்திரன், ரிஷப ராசி, கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்நிலையில் ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் என்ன?

கோப்புப்படம்
கோப்புப்படம்

ரிஷபம் – இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். உங்களின் பல விருப்பங்கள் ஒரே நேரத்தில் நிறைவேறுவதால் மனதில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். மேலும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். தந்தை மற்றும் மூத்தவர்களின் ஆசியுடன், மதிப்புமிக்க பொருள் அல்லது பணம் பெறுவதற்கான ஆசை நிறைவேறும். சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்கள் சற்று கால தாமதமாக நடக்கும்.

மிதுனம் – இனிய நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். கணவன் -மனைவி ஒற்றுமை நன்றாக உள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்னைகளால் சில மனவருத்தங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். புதிய கடன் முயற்சி தாமதமாகும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் – மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கடகம் – இனிய நாள். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். கல்விக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறும். இரும்பு, கட்டிடம், சர்வீஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் பல நல்ல விஷயங்களை பார்ப்பார்கள். சுபகாரிய பேச்சுக்கள் இனிதே நிறைவேறும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் – இன்று உங்களுக்கு மங்களகரமான நாளாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பதாக இருக்கும். செய்யவேண்டியதை செய்வதற்கான வாய்ப்பு கிட்டும். மதிய வேளையில் சில நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வோடு இருங்கள். மாலையில் சில சுபகாரியங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டும்.

கன்னி – குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ கணவன் – மனைவி ஒற்றுமை சிறப்பானதாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்லூரிகளில் அல்லது உயர்கல்விக்கான இடங்கள் கிடைக்கும். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடல் நலம் சீராக இருந்து வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிட்டும். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிது பற்றாக்குறை இருந்தாலும், நாளின் பிற்பகுதியில் தனவரவு உண்டு. சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிட்டும்.

துலாம் – உத்யோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிட்டும். உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை உண்டாக வழி உண்டு. சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நிலவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் அவற்றில் நன்மை அடைய முடியும்.

விருச்சிகம் – பொருளாதார ரீதியாக வலிமையான நாள். பணப்பலன்கள் உண்டு. தடைபட்ட பணிகள் மீண்டும் தொடங்கலாம். தொழில் திட்டங்கள் வேகம்பெறும். மரியாதையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் பின்னர் வருத்தப்பட வைக்கும். வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிட்டும். ‘

தனுசு – நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சிறு குழந்தைகளை படிக்க உட்கார வைப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களால் மகிழ்ச்சி கிட்டும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. இரும்பு தொழில், ரியல் எஸ்டேட், ஆயில் அண்ட் காஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமமான நாள்.

மகரம் – உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரலாம். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக சில மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் மரியாதை பெறலாம். இது உங்கள் நண்பர்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நிம்மதி கிட்டும். எனவே தர்ம வழியில் செயல்படுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெறிற கிட்டும். இறையருளால் இன்றைய நாள் சிறக்கும்.

கும்பம் – இலக்கை அடைய சரியான திட்டமிடல் தேவை. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய அளவிலான உடல் நல பிரச்சனை ஏறப்ட்டு நீங்கும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். விசா தொடர்பான காரியங்களை துவங்க இன்று நல்ல நாள்.

மீனம் – பரபரப்பான நாள். வீட்டு உபயோக பொருட்களுக்கு பணம் அதிகம் செலவழிக்க வேண்டிய நாளாக அமையும். உலக இன்பங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கான வழிமுறைகளின் பலனைப்பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் எவ்வித தகராறிலும் ஈடுபடவேண்டாம். பணப்பரிவர்த்தனையில்கவனம் தேவை.

WhatsApp channel

டாபிக்ஸ்