தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Horoscope: ‘டென்ஷன் தீருமா?’ மேஷ ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்!

August Horoscope: ‘டென்ஷன் தீருமா?’ மேஷ ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 28, 2023 10:55 AM IST

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாதிப்பு என்று ஒன்று தனியாக மேஷ ராசிக்கு வராது.

மேஷ ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்
மேஷ ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்

வேலைகளில் சிரமம் இருக்கலாம், கடினம் இருக்கலாம். அலைச்சல் இருக்கலாம். ஆனால் வேலை, வாழ்க்கை, பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பெரிய பாதகம் இல்லை. குரு அடுத்தமாதம் வக்கிரம் அடைகிறார். அதன் பலன்கள் தனியாக இருக்கும். 

சுமூகமாக மேஷ ராசிக்கு போய்க் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் ராகுகேது பெயர்ச்சியால் திருமண பந்தங்கள் கை கூடும். சுக்ரன் வக்கிரம் அடைவதால், சிம்மத்திலிருந்து கடகத்திற்கு வருவதால், தள்ளிப்போன வரன் கை கூடும். காதல் திருமணங்கள் கை கூடும். 

குடும்ப வாழ்க்கையில் பெரிய குழப்பம், வருத்தம் எதுவுமில்லை. சின்ன சின்ன சண்டைகள் வரலாம். அதுவும் ராகு, கேது இருப்பதால் தான். மற்றபடி பெரிய பாதிப்பு இல்லை. மாணவர்களுக்கு புதன், குரு, சுக்ரன், சனி அனைத்தும் வருத்தப்பட வேண்டிய இடத்தில் இல்லாதது சாதகம். 

உங்கள் திட்டங்கள் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தை அழகாக அழைத்துச் செல்லும் பாக்யம். உங்கள் கோரிக்கைகள் கூறாமல் தானாக நடக்கும். சுக்ரன் வக்கிரமடைவதாலும், செவ்வாய் 6 ம் இடத்திற்கு நகர்வதால், கேட்டதெல்லாம் எதிர்க்காமல் கிடைக்கும். 

ஆரோக்கியத்தில் பார்த்தால் எந்த கண்டமும் இல்லை. டென்ஷன் கொஞ்சம் இருக்கும். ஏடாகூடமாக சில விசயங்கள் நடக்கும். அதை நீங்களே சரி செய்து கொள்வீர்கள். முதியோருக்கு புதிய திட்டங்கள் இருந்தால், அதை கொஞ்சம் தள்ளிப்போடலாம். உங்களின் வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படாது. செவ்வாய் ஆறாம் இடத்தில் இருப்பதால் புதிய திட்டங்களை கொஞ்சம் யோசித்து செய்யலாம். 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாதிப்பு என்று ஒன்று தனியாக மேஷ ராசிக்கு வராது. 

WhatsApp channel

டாபிக்ஸ்