தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Horoscope: ‘குழப்பங்கள் தீருமா?’ கடக ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் இதோ!

August Horoscope: ‘குழப்பங்கள் தீருமா?’ கடக ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் இதோ!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 28, 2023 11:11 AM IST

Kadagam August Rasipalan: மொத்தமாக கடக ராசிக்கு பார்த்தால் பெரிய பாதிப்பு இல்லை. சில இடங்களில் ஏற்றம், இறக்கம் இருக்கும். செய்ய நினைக்கும் விசயங்களை முழுஈடுபாடோடு செய்தால் அனைத்தையும் பெறுவீர்கள்.

கடக ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்
கடக ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்

தொழில் சிறப்பாக இருக்கும். சனி 8 வது இடத்தில் இருப்பதால் தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். மற்றபடி எந்த கவலையும் வேண்டாம். வேலையில் உள்ள சிக்கல்குறையும், இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் பார்த்தால், அதிர்ஷ்டமாக வரன் அமையும். எதிர்பாராத சந்தோசம் கிடைக்கும். 75 சதவீதம் மகிழ்வான மாதமாக ஆகஸ்ட் இருக்கும். ஏதோ ஒரு இடத்தில் பிரச்னை இருக்கும். மற்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. 

மாணவர்களுக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கும். எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பலர் உங்களை குழப்பிவிடுவார்கள். குழப்பத்தில் முடிவு எடுப்பாதீர்கள். நல்ல ஆலோசனைகளை பெற்று முடிவு எடுங்கள். எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கு. 

இல்லத்தரசிகளுக்கு சுகமான சுமை என்பதை உணர்வீர்கள். இதுவரை வெறுப்பாக இருந்த குடும்பப் பணி, சுகமாக மாறும். பெறுமையாக உணர்வீர்கள். நீங்கள் பலசாலி என்பதை உணர்வீர்கள். ஆற்றலோடு இருப்பீர்கள். 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனம், பயணம் அனைத்திலும் கவனம் தேவை. அதில் தான் நேரம் சரியில்லாமல் இருக்கிறது. 

முதியோருக்கு மனநிம்மதி இருக்கும். இருப்பதை வைத்து வாழ்ந்து விடுங்கள். போராட்ட வாழ்க்கை இருந்தால் தெய்வம் துணையாக இருக்கும்.  உங்கள் வீழ்ச்சி தடுக்கப்படும். 

மொத்தமாக கடக ராசிக்கு பார்த்தால் பெரிய பாதிப்பு இல்லை. சில இடங்களில் ஏற்றம், இறக்கம் இருக்கும். செய்ய நினைக்கும் விசயங்களை முழுஈடுபாடோடு செய்தால் அனைத்தையும் பெறுவீர்கள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்