தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: பெட்ரோல் பங்கில் 73 லட்சம் மோசடி செய்த பெண் கைது!

Crime: பெட்ரோல் பங்கில் 73 லட்சம் மோசடி செய்த பெண் கைது!

Sep 15, 2023, 11:43 AM IST

கௌசல்யா பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ரூபாய் 73,00,000 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கௌசல்யா பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ரூபாய் 73,00,000 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

கௌசல்யா பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ரூபாய் 73,00,000 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் பெட்ரோல் பங்க்கில் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் (55). இவர் கிணத்துக்கடவு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். 

இவரது பெட்ரோல் பங்கில் கடந்த 2019‌ முதல் நான்கு வருடங்களாக கௌசல்யா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ரூபாய் 73,00,000 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பெட்ரோல் பங்ன் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் மோசடி செய்த நபரான கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மதிவாணன் மனைவி கௌசல்யா (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும் அவரிடம் இருந்து நான்கு சக்கர வாகனம்-1, நில பத்திரம்-2, இரண்டு சவரன் செயின் மற்றும் ரூபாய் 90,000 பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கௌசல்யாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி