தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Vs Bjp: 'அதிமுக எம்எல்ஏக்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்' ஈபிஎஸ் விளக்கம்

ADMK Vs BJP: 'அதிமுக எம்எல்ஏக்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்' ஈபிஎஸ் விளக்கம்

Oct 04, 2023, 12:29 PM IST

தென்னை விவசாயிகளின் நலனை குறித்து பேசவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். ஏன் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திப்பது இல்லையா என்றார். (HT_PRINT)
தென்னை விவசாயிகளின் நலனை குறித்து பேசவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். ஏன் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திப்பது இல்லையா என்றார்.

தென்னை விவசாயிகளின் நலனை குறித்து பேசவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். ஏன் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திப்பது இல்லையா என்றார்.

சேலம் எடப்பாடி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

அப்போது கூட்டணி குறித்து நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். சேலம் மாநகர் பூத் கமிட்டி நிகழ்ச்சியின் போது நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன் பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதியாக உள்ளது.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை தீர்மானமாக நிறைவேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். அதிமுக தலைமையில் இங்கு கூட்டணி அமையும் எந்தெந்த கட்சிகள் கூட்டணிகள் சேரும் என்ற விபரங்களை பொறுத்திருந்து பாருங்கள். நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். என்றார்.

மேலும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது அவருடைய கருத்து அதற்கு நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது எங்கள் கட்சி பற்றி தான் நாங்கள் பேச முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 10% வரை கூட நிறைவேற்ற வில்லை ஆனால் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்லி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தென்னை விவசாயிகளின் நலனை குறித்து பேசவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். ஏன் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திப்பது இல்லையா என்றார். மேலும் முரண் பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் நிறைந்துள்ளன அந்த கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை. 

அதேசமயம் திமுக அரசுக்கு டெல்டா விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற்று தந்திருக்க வேண்டும் திமுக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை விவசாயிகள் பிரச்சனைக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி