தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Kathiravan V HT Tamil

May 17, 2024, 05:29 PM IST

google News
“Redpix Felix Gerald: இன்று திருச்சி சிறையில் இருந்த சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ் ஜெரால்டை கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.”
“Redpix Felix Gerald: இன்று திருச்சி சிறையில் இருந்த சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ் ஜெரால்டை கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.”

“Redpix Felix Gerald: இன்று திருச்சி சிறையில் இருந்த சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ் ஜெரால்டை கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.”

சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை வெளியிட்ட வழக்கில் கைதான ரெட் பிக்ஸ் செய்தி ஆசிரியர் பெலிக்ஸை வரும் மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. 

பெலிக்ஸ் ஜெரால்டு கைது

பெண் காவலர்களை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், ரெட் பிக்ஸ் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கடந்த மே 3ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மே மாதம் 31ஆம்தேதி வரை நீதிமன்ற காவல்

இன்று திருச்சி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு கோவைக்கு அழைத்துரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

சவுக்கு சங்கர் கைதின் பின்னணி

யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.

மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு சென்ற சவுக்கு சங்கர், தனது கையை காவல் துறையினர் உடைத்தாக நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் நாளை உடன் நிறைவடைகிறது.

இதனிடையே திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் நேற்றைய தினம் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும் வழியில் பெண் காவலர்கள் தன்னை முக கண்ணாடியை கழற்ற சொல்லி முகத்தில் அறைந்ததாகவும், மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும் நீதிபதியிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நாளை மறுநாள் 4 மணிக்குள் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் ரகசிய இடத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியியாகி உள்ளது.

இதன் இடையே தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வரும் மே 20ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி