தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayakath Health : விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு.. விஜய பிரபாகரன் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Vijayakath Health : விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு.. விஜய பிரபாகரன் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Divya Sekar HT Tamil

Aug 24, 2023, 10:58 AM IST

கேப்டனின் உடல்நிலையில் பின்னடைவு என விஜய பிரபாகரன் கூறியது அவரது ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேப்டனின் உடல்நிலையில் பின்னடைவு என விஜய பிரபாகரன் கூறியது அவரது ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேப்டனின் உடல்நிலையில் பின்னடைவு என விஜய பிரபாகரன் கூறியது அவரது ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையின் உடல்நிலை சற்று பின்னடைவாக தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

நடிகரும் தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் திரைப்பட நடிகர் சண்முக பாண்டியன், இருவமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபிரபாகரன், "கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.

உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார். கேப்டனின் மந்திரமே "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன்” என தெரிவித்தார்.

நீட் தேர்வி குறித்த கேள்விக்கு, “நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் உள்ளது. இதனை அரசியல் ஆக்காமல் சரியான விஷயத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்களில் கூட இறப்பு குறைவாக தான் உள்ளது நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என பொய்யான வாக்குறுதியை திமுக அரசு கூறுவதால் மாணவர்களுக்கு இன்னும் அழுத்தம் ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.

கேப்டனின் உடல்நிலையில் பின்னடைவு என விஜய பிரபாகரன் கூறியது அவரது ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி