தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode: ஈரோட்டில் கடையின் ஷட்டரை திறக்க போன சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

Erode: ஈரோட்டில் கடையின் ஷட்டரை திறக்க போன சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

May 16, 2023, 11:07 AM IST

மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுவன், கடையைத் திறக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்
மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுவன், கடையைத் திறக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்

மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுவன், கடையைத் திறக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்

சத்திய மங்கலம் பகுதியில் மின் கசிவு காரணமாக மளிகைக் கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுவன், கடையைத் திறக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவருக்கு பிரவீன் என்ற மகன் உள்ளார். அவருக்கு வயது 14. இந்நிலையில் கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தன் தந்தையின் மளிகைக் கடைக்கு அவருக்கு உதவியாக சென்று வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பிரவீன் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது, மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாத பிரவீன் ஷட்டரை தூக்கியபோது மின்சாரம் தாக்கி அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவர் பிரவீனை மீட்டனர். இதையடுத்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி விடுமுறையில் பொறுப்பாக தந்தைக்கு உதவி செய்ய கடைக்கு சென்ற மகன் இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி