தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayakanth Health Update: சுவாசத்தை சீராக வைக்க விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை

Vijayakanth Health Update: சுவாசத்தை சீராக வைக்க விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை

Nov 29, 2023, 05:51 PM IST

தொண்டையில் துளையிட்டு டியூப் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தொண்டையில் துளையிட்டு டியூப் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தொண்டையில் துளையிட்டு டியூப் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு நுரையிரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

வெண்டிலேட்டர் உதவியுடன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது உடல் சீராக இயங்காதபோது நுரையிரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் செயற்கையான முறையில் அளிக்கப்படும். இதையும் உடல் ஏற்றுக்கொள்ளாதபோது, ஆக்சிஜனை நுரையிரலுக்கு நேரடியாக செலுத்தும் விதமாக தொண்டையில் துளையிட்டு, அதனை சுவாசப்பாதை வழியில் ட்யூப் மூலம் செலுத்தி ஆக்சிஜனை செலுத்துவதாகும்.

விஜயகாந்த் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையின் ஆக்சிஜன் அளவை பொறுத்து சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்பட்டிருக்கும் நுரையிரல் தொற்றை சரி செய்ய ஆன்டி வைரல் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. நுரையிரல் தொற்று காரணமாக சுவாச பாதையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுவாசத்தை சீராக வைத்துக்கொள்ளும் விதமாக செயற்கை சுவாசம், டிரக்யாஸ்டமி சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக  தகவல் வெளியான நிலையில், அதற்கு தேமுதிக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் உடல் நிலை குறித்து இன்று வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி