தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ஓசூர் ரயில் தடம் புரண்டது முதல் வேங்கை வயல் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Top 10 News: ஓசூர் ரயில் தடம் புரண்டது முதல் வேங்கை வயல் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Apr 21, 2023, 07:42 AM IST

Vengai Vayal Issue: வேங்கை வயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உடையது என்று டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.
Vengai Vayal Issue: வேங்கை வயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உடையது என்று டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.

Vengai Vayal Issue: வேங்கை வயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உடையது என்று டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.

தமிழகம்

•தூத்துக்குடியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் தடம் புரண்ட 6 பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒசூர் தருமபுரி, சேலம், பகுதிகளில் ரயில் போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

•வேங்கை வயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உடையது என்று நீர் பகுப்பாய்வு மையம் வெயிட்டுள்ள சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

•ஜாக் கமிட்டி இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

•சென்னையில் 335 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று (ஏப்ரல் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கும் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

•குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தேசம்

•தெலுங்கானாவில் ஜக்டியால் பகுதியில் கோரட்லா அரசு மருத்துவமனையில் ராவளி என்பவருக்கு 24 விரல்களோடு ஆண்குழந்தை பிறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

•இந்தியாவில் கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கி ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்டோரின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

• உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் புவி சுற்று வட்ட பாதைக்கு செல்ல நடந்த சோதனை ஓட்டத்தின்போது வானில் வெடித்து சிதறியது

விளையாட்டு

•16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

•கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேப்பிடல்ஸ்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி