தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate : தங்கம் விலையில் மாற்றமா? இதோ விலை நிலவரம்!

Today Gold Rate : தங்கம் விலையில் மாற்றமா? இதோ விலை நிலவரம்!

Divya Sekar HT Tamil

Jan 22, 2023, 12:19 PM IST

22 காரட் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று கிராம் 5,320 ரூபாயாக உள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று கிராம் 5,320 ரூபாயாக உள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று கிராம் 5,320 ரூபாயாக உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

Freshworks Jobs: ‘+2 முடிச்சா போதும்! பயிற்சியின் போது 10 ஆயிரம் சம்பளம்! அப்புறம் பல லட்சத்தில் சம்பளம்!’

Weather Update: ’தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கோடை மழை! குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!’

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

இன்று (ஜன 22 ) விடுமுறை தினம் என்பதால் ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே தொடருகிறது. அதன்படி சென்னையில் இன்று 22 காரட் கிராம் ஆபரணத் தங்கம் 5,320 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 42,560 ரூபாயாக உள்ளது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 5,682 ரூபாயாக உள்ளது. சவரன் சுத்த தங்கத்தின் விலை 45,456 ரூபாயாக உள்ளது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து கிராம் 74 ரூபாய் 30 பைசாவாக உள்ளது. கிலோ 200 ரூபாய் குறைந்து கிலோ வெள்ளி விலை 74,300 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரண் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

24 காரட் vs 22 காரட்

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது.

22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.

உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி