தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ‘அதிமுக பற்றி கவலையில்லை’ அண்ணாமலை திடீர் பேட்டி!

Annamalai: ‘அதிமுக பற்றி கவலையில்லை’ அண்ணாமலை திடீர் பேட்டி!

HT Tamil Desk HT Tamil

Mar 09, 2023, 08:28 AM IST

கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேனேஜர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும். ( ANI)
கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேனேஜர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும்.

கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேனேஜர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

HBD Arthur Cotton: 'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!

‘‘மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் வரவேற்று உள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தனியாக கடிதம் எழுதி உள்ளது. டெல்லி மதுபான ஊழல் போல் தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு வந்து விடும் என மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். இதனால் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக அமர்ந்து பேசி ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கான பணிகளை செய்வது தான். அண்ணாமலை 38 ஆண்டுகளில் எப்படி இருந்தேனோ, அது போல் இருப்பேன். அண்ணாமலையை மாற்ற முடியாது. அதிமுகவினர் என் மீது புகார் கூறினாலும் கவலைப்பட மாட்டேன்.

கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேனேஜர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும்.

ஆன்-லைன் சூதாட்ட மசோதாவை கவர்னர் ஏன் திரும்பி அனுப்பினார் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது தேர்வு எழுதினால் அந்த விடை தாளை பணம் கட்டி நகலை பெறுவோம். ஆன்-லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் என்பதை கடிதத்துடன் வெளியிட வேண்டும். சட்டமன்றத்தில் மீண்டும் கூடி சட்டத்துக்குட்பட்டு மசோதாவை அனுப்ப வேண்டும். ஆன்-லைன் சூதாட்டத்திற்கு எதிராக கவர்னர் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கவர்னர் அறிவுறுத்தியது போல் இருக்க வேண்டும்,’’
என்று அப்போது அண்ணாமலை தெரிவித்தார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி