தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn 10th Results 2023 : 87.45 சதவீதம் அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

TN 10th Results 2023 : 87.45 சதவீதம் அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Priyadarshini R HT Tamil

May 19, 2023, 10:41 AM IST

10ம் வகுப்பு தேர்வில் 87.45 சதவீதம் அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
10ம் வகுப்பு தேர்வில் 87.45 சதவீதம் அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

10ம் வகுப்பு தேர்வில் 87.45 சதவீதம் அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9,14,320, மாணவிகளின் எண்ணிக்கை 4,55,017, மாணவர்களின் எண்ணிக்கை 4,59,303 ஆகும். 

8,35,614 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 4,04,904, மாணவிகள் 4,30,710 பேர் ஆவர். 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்களைவிட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

கடந்தாண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம். கடந்தாண்டு 90.07 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 

10ம் வகுப்பு தேர்ச்சி - டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் -

பெரம்பலூர் - 97.67%

சிவகங்கை - 97.53%

விருதுநகர் - 96.22%

கன்னியாகுமரி - 95.99%

தூத்துக்குடி - 95.58%

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,502. உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,502.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை 1,026

பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

அரசுப்பள்ளிகள் - 87.45 சதவீதம்

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 92.24 சதவீதம்

தனியார் சுயநிதி பள்ளிகள் - 97.38 சதவீதம்

இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 91.58 சதவீதம்

பெண்கள் பள்ளிகள் - 94.38 சதவீதம்

ஆண்கள் பள்ளிகள் - 83.25 சதவீதம்.

மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கும், www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற முகவரிகளிலும் தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழி படிவங்களில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி