தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn 10th Results 2023 : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - பெரம்பலூர் முதலிடம் - உங்கள் உங்கள் மாவட்டம் எந்த இடம்?

TN 10th Results 2023 : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - பெரம்பலூர் முதலிடம் - உங்கள் உங்கள் மாவட்டம் எந்த இடம்?

Priyadarshini R HT Tamil

May 19, 2023, 12:06 PM IST

TN 10th Results 2023 : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை பிடித்துள்ளது.
TN 10th Results 2023 : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை பிடித்துள்ளது.

TN 10th Results 2023 : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை பிடித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் 91.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவீத பேரும், மாணவிகள் 94.66 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடத்தில் பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.53 சதவீத தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் 2வது இடத்திலும், 96.22 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 3வது இடமும், 95.99 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் 4வது இடமும், 95.58 சதவீத தேர்ச்சியுடன் தூத்துக்குடி மாவட்டம் 5வது இடத்தையும், 95.40 சதவீத தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் 6வது இடத்தையும், 94.53 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் 7வது இடத்தையும், 94.28 சதவீத தேர்ச்சியுடன் திருச்சி மாவட்டம் 8வது இடத்தையும், 94.19 சதவீத தேர்ச்சியுடன் நெல்லை மாவட்டம் 9வது இடத்தையும், 94.12 சதவீத தேர்ச்சியுடன் தென்காசி மாவட்டம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. 83.53 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் பெற்றுள்ளது.

கணிதத்தில் 3,649 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 3,584 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும், ஆங்கிலத்தில் 89 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.

பிற்பகல் 2 மணிக்கு பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்- 

ஆங்கிலம் - 89 

கணிதம் - 3,649

அறிவியல் - 3,584 

சமூக அறிவியல் - 320 

பாடவாரியாக தேர்ச்சி சதவீதம் - 

தமிழ் - 95.55 சதவீதம் 

ஆங்கிலம் - 98.93 சதவீதம் 

கணிதம் - 95.54 சதவீதம் 

அறிவியல் - 95.75 சதவீதம் 

சமூக அறிவியல் 95.83 சதவீதம் 

 

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி