தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Accident: திருப்பத்தூர் விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்த முதல்வர்!

Accident: திருப்பத்தூர் விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்த முதல்வர்!

Sep 11, 2023, 10:30 AM IST

விபத்தில் ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதல்வர்
விபத்தில் ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதல்வர்

விபத்தில் ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதல்வர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம் பள்ளி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

வேலூர் மாவட்டம் ஓணாங்குட்டை பகுதியை சேர்ந்த 40 பேர் கடந்த 8ம் தேதி 2 வாகனங்களில் கர்நாடக மாநிலம் தர்மசாலா பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம் பள்ளி பகுதியில் வேன் பஞ்சரானது. இதனால் அதில் பயணித்தவர்கள் சாலையின் நடுவே அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் காவல் நிலையித்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவ்ம அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது.

"வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8-9-2023 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11-9-2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். 

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை

அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்". என்று அதில கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி